பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடனே துணியைப் பார்ப்பதற்கு அவரே நேராகப் புறப்பட்டுச் சென்றார். அவரைக் கண்டதும், மிகவும் மும்முரமாகத் துணி நெய்வதுபோல் இரு வரும் நடித்தார்கள். சக்கரவர்த்தி எவ்வளவுதான் கூர்ந்து பார்த்தும், துணி தெரியவில்லை. அங்கே இருந்தாலல்லவா தெரிவதற்கு? ஆனாலும், உண்மையைக் கூற அவருக்குத் துணிச்சல் இல்லை, “ஆஹா! அற்புதம்! அபாரம்! பிரமாதம்! துணி என்றால் இதுவல்லவா துணி!” என்று வாய்விட்டுக் கூறினார்.

“இந்தத் துணியிலே தங்களுக்கு அழகான ஆடை தைக்கப் போகிறோம். ஆடை தயாரானதும் அதைத் தாங்கள் அணிந்து இந்த நகரில் ஊர்வலம் வர வேண்டும்” என்றார்கள் அந்தப் பொல்லாதவர்கள்.

சக்கரவர்த்தியும் ‘சரி’ என்றார். ஒரு நல்ல நாள் பார்த்து அன்று ஊர்வலம் நடத்துவது என்று முடிவு செய்தார்கள்.

குறித்த நாளில் சக்கரவர்த்தி துணி தயாராகும் விட்டுக்கு வந்தார். நெசவாளராய் நடித்த இருவரும் சக்கரவர்த்தி அணிந்திருந்த உடைகளைக் கழற்றினார்கள். பிறகு அவர்களில் ஒருவன் கால்சட்டையைப் போட்டுவிடுவது போல் பாசாங்கு செய்தான்; மற்றொருவன் மேல்சட்டையைப் போட்டுவிடுவது போல் நடித்தான். சிறிது நேரத்தில், “ஆஹா ! எவ்வளவு அழகா யிருக்கிறது! சக்கரவர்த்திக்கு மிகவும் பொருத்த

8