பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தச் சிறு கதவைப் பூட்டிச் சாவியை மேஜை மேல் வைத்து விட்டு, யோசனை செய்து கொண்டிருந்தாள்.

அப்போது மேஜை மேல் ஒரு சிறு புட்டி இருந்ததை அவள் கண்டாள். அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். அதன் மேல் ‘என்னைக் குடி’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆலிஸ் ‘மடக் மடக்’கென்று அந்தப் புட்டியிலிருந்த திரவத்தைக் குடித்தாள். குடித்து முடிந்ததும், ‘என்ன இது? நான் குறுகிக் கொண்டே போகிறேனே!’ என்றாள். ஆம்; அவள் உயரம் குறுகிக் குறுகிக் கொண்டே வந்து, சில விநாடிகளில் பத்து அங்குலமாகி விட்டது. சிறு பொம்மை போல் உருமாறி விட்டாள்!

“இப்போது நான் அந்தச் சின்னஞ்சிறு பாதை வழியாகப் புகுந்து, அந்தத் தோட்டத்திற்குச் சுலபமாகப் போய்ச் சேர்ந்து விடலாம்” என்று ஆனந்தமாகக் கூறினாள். உடனே திரைக்குப் பின்னாலிருந்த அந்தச் சிறிய கதவை நோக்கி ஓடினாள். கதவைத் திறக்கச் சாவி வேண்டுமே ! ஆனால், மேஜை மேல் இருந்த சாவி அவளுக்கு எட்டவில்லை. முன் போல இருந்தால், எட்டியிருக்கும். இப்போது அவள் பத்து அங்குல உயரம்தானே இருக்கிறாள்? எப்படி எட்டும்? மேஜை மேல் தொத்தி ஏற முயன்றாள். அது கண்ணாடி மேஜையானதால், ஏற முடியவில்லை; வழுக்கி வழுக்கிக் கீழே விழுந்தாள். பாவம்!

“என்ன செய்வது?” என்று தெரியாமல் சிறிது நேரம் அவள் விழித்துக் கொண்டிருந்தாள். அப்போது மேஜைக்கு அடியில் ஒரு கண்ணாடிப் பெட்டி இருந்ததை அவள் கண்டாள். உடனே பெட்டியைத்

9