பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதியவரும் அவரேதான்! அப்படியானால், பெயர் வேறாக இருக்கிறதே? இருவரும் ஒருவரேதான்! ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகக் கணிதப் பேராசிரியரான சார்லஸ் லட்விட்ஜ் டாஜ்சன என்பவரது புனைபெயர்தான் லூயி கரால்!

இந்த உண்மை தெரிந்த போது, மகாராணிக்கு ஒரே வியப்பாக இருந்தது. “ஒரு கணிதப் பேராசிரியருக்கு இவ்வளவு நன்றாகக் கதை சொல்லக் கூடத் தெரிகிறதா!” என்றார்.

குழந்தைகளில் பெரும்பாலோருக்குக் கணிதம் என்றாலே கசப்பு. அப்படிப்பட்ட கடினமான கணிதத்தைப் போதிக்கும் ஆசிரியர், குழந்தைகள் உள்ளத்தைக் கவரும் வகையில், அருமையான கதைகளையும் சொல்லுகிறார் என்றால், யாருக்குத்தான் வியப்பாக இராது?

லூயி கரால் குழந்தைகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அவருடைய வீட்டுக்குச் சென்றால், அங்கே மூலைக்கு ஒன்றாக விளையாட்டுச் சாமான்கள் கிடக்கும். “இவருக்குக் குழந்தைகள் அதிகம் போலிருக்கிறது” என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அவரோ கல்யாணமே செய்து கொள்ளவில்லை. ஆண்டர்சனைப் போலவே, அவரும் சாகும் வரையில் பிரம்மச்சாரியாகவே இருந்தார். அவர் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்காகவே, அவர் நிறைய விளையாட்டுச் சாமான்கள் வாங்கி வைத்திருந்தார். எப்போதும், அவர் வீட்டில் குழந்தைகள் கூட்டம், கூட்டமாக இருந்து கொண்டே இருப்பார்கள்.

அவருடைய நண்பருக்கு மூன்று பெண் குழந்தைகள் உண்டு அந்த மூவரும் அவரிடத்தில்

13