பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நாள் ஆலிஸ் என்ற அந்தப் பெண், “இந்தக் கதையை எத்தனை தடவை நாங்கள் கேட்டிருக்கிறோம்? ஆனாலும், திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும் போலிருக்கிறது. அலுப்புத் தட்டவே இல்லை. இந்தக் கதையை, அப்படியே எழுதிப் புத்தகமாக வெளியிட்டால், இன்னும் எத்தனையோ குழந்தைகள் படிப்பார்களே! ஏன் வெளியிடக் கூடாது?” என்று கராலைப் பார்த்துக் கேட்டாள்.

“சரி, உன் விருப்பப்படியே செய்யலாம்” என்றார் அவர்.

அன்றே கதையை எழுதத் தொடங்கினார். அவருக்குப் படங்கள் போடவும் தெரியும். கதைக்கு ஏற்றபடி, படங்களை அவரே வரைந்தார். அந்தப் படங்கள் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும், புத்தகமாக அச்சிடும் போது, அதில் அவர் அந்தப் படங்களைச் சேர்க்க விரும்பவில்லை. வேறு ஒரு புகழ் பெற்ற ஓவியரைக் கொண்டு, படங்கள் போடச் செய்தார். கதையைப் போலவே, அந்தப் படங்களும் உலகப் புகழ் பெற்று விட்டன.

புத்தகத்தை வெளியிடும் போது அவர், தம் சொந்தப் பெயரில் அதை வெளியிடவில்லை. ‘லூயி கரால்’ என்ற புனை பெயரிலே 1865-ஆம் ஆண்டில் வெளியிட்டார். புத்தகம் வெளியான சில நாட்களுக்குள் லூயி கராலின் புகழ், இங்கிலாந்து முழுவதும் பரவி விட்டது. ஆயினும், கணிதப் பேராசிரியர் டாஜ்சன்தான் லூயி கரால் என்பது பலருக்குத் தெரியாமலே இருந்து வந்தது. புனை பெயரில் ஒளிந்து வாழவே, அவர் விரும்பினார். எவ்வளவு நாளைக்குத்தான் அப்படி

15