பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த ஊரில், ஒரு தெள்ளுப்பூச்சி இருந்தது. அது மற்ற தெள்ளுப் பூச்சிகளைப் போல், மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்காது. மிகவும் கருணையுள்ள பூச்சி! அதிகமாகப் பசித்தால்தான், அது மனிதர்களைக் கடிக்கும். அப்போது கூட, வலி கொஞ்சமும் தெரியாதபடி, மெதுவாகக் கடிக்கும்.

இந்த நல்ல தெள்ளுப் பூச்சி, அந்தப் பொல்லாத அரசனைப் பற்றிக் கேள்விப்பட்டது. அவனுக்கு எப்படியாவது நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்தது.

“அவனோ முரட்டு அரசன். அவனை நாம் கடித்தால், நம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்……ஏற்படட்டுமே! அவனைச் சும்மா விடக் கூடாது” என்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டது.

அன்று இரவு அரசன் வழக்கம் போல், படுக்கை அறைக்கு வந்தான். நிம்மதியாகப் படுக்கையில் சாய்ந்தான். சிறிது நேரம் கூட ஆகவில்லை. ‘சுருக்’கென்று ஊசி குத்துவது போல் அவன் மார்பில் ஏதோ கடித்தது. “ஆ! ச்சூ… என்ன இது?” என்று கதறிக் கொண்டே, அரசன் எழுந்தான். கடித்த இடத்தில் மெதுவாகத் தடவிப் பார்த்தான். கையில் ஒன்றும் அகப்படவில்லை.

“என்னவா? நான்தான் தெள்ளுப்பூச்சி. உன்னைத் திருத்தி, நல்ல மனிதனாக்குவதற்கு வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது.

“என்ன ! தெள்ளுப்பூச்சியா? இதோ ஒரு விநாடியில், உன் கதி என்ன ஆகிறது, பார்” என்று சீறினான் அரசன். படுக்கை விரிப்பு, மெத்தை, தலையணைகள் எல்லாவற்றையும் பலமாக உதறினான். என்னதான்

20