பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்குக் கல்யாணம் ஆகி எத்தனையோ வருஷங்கள் ஓடி விட்டன. ஆனாலும், கொஞ்சி விளையாட ஒரு குழந்தை கூட இல்லையே!” என்று தன் மனைவியிடம் கூறி வருத்தப்பட்டான் ஒரு விறகு வெட்டி.

“கட்டை விரல் அளவிலே ஒரு பிள்ளையிருந்தாலும் போதுமே! அதற்குக் கூட நமக்குக் கொடுத்து வைக்கவில்லையே!” என்று கவலைப்பட்டாள் அவன் மனைவி.

“கவலை வேண்டாம். கட்டை விரல் அளவிலே உங்களுக்கு ஒரு பிள்ளை கிடைப்பான்” என்று அப்போது ஓர் அசரீரி கேட்டது.

மறு விநாடி, “அம்மா, அம்மா! அப்பா, அப்பா!” என்ற குரல் கேட்டது. இருவரும் குரல் வந்த திசை-

33