பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட புத்தகங்களையே எழுதி வந்தனர். பிறகு சொற்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதைப் பற்றிக் கூடப் புத்தகங்கள் எழுதியிருக்கின்றனர். ஆயினும், அவர்களது புகழை நிலை நாட்டியவை வேறு எவையுமல்ல; அவர்கள் திரட்டிய நாடோடிக் கதைகளே!

ஜாகோப் மிகவும் உற்சாகமுள்ளவர்; பழமையில் அதிகமான பற்றுக் கொண்டவர். அவர் கிராமம், கிராமமாகச் சென்று, அங்கிருந்த வயதானவர்களிடம் கேட்டுப் பல கதைகளைச் சேகரித்தார். இளையவரான வில்ஹெல்ம் அந்தக் கதைகளை, உயிருள்ள நடையிலே எழுதலானார். அழகாக எழுதும் ஆற்றல் அவருக்கு அதிகமாயிருந்தது. மிகவும் மெதுவாகவே, அவர் எழுதுவார். எந்த, எந்தச் சொற்களை, எந்த, எந்த இடத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்று, ஒரு தடவைக்கு

41