பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுக் கதைகள் (Grimm's Fairy Tales) என்றால், உலகத்தில் யாருக்குத்தான் தெரியாது? அவர்களது இடை விடாத உழைப்புக்கும், முயற்சிக்கும் அறிகுறியாக, இன்றும் அந்தக் கதைகள் விளங்கி வருகின்றன.

கிரிம் சகோதரர்கள் முயற்சி எடுத்திராவிடில், அக்கதைகளின் கதி என்ன ஆகியிருக்குமோ? ஆரம்பத்தில், ஜெர்மன் மொழியில், அவர்களால் எழுதப்பட்ட கதைகள், விரைவில் ஆங்கிலத்திலே வெளி வந்தன. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அக்கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு, உலகின் பல பாகங்களிலும், பல மொழிகளில், பல வகைப் படங்களுடன், பல பதிப்புக்கள் வெளி வரத் தொடங்கின.

இன்று ஆண்டர்சன் கதைகளுக்கு உள்ள மதிப்பு, கிரிம்ஸ் கதைகளுக்கும் இருக்கின்றது. ஆண்டர்சன் கதைகளை விரும்பிப் படிப்பது போலவே, கிரிம்ஸ் கதைகளையும் ஆவல், ஆவலாகப் படித்து மகிழ்கின்றனர், குழந்தைகள். குழந்தைகளை மகிழ்விக்கும் இலக்கியச் செல்வத்தை, உலகுக்குத் தேடித் தந்த இந்த இரட்டையரை மறக்க முடியுமா? பெரியவர்கள் மறந்தாலும், மறக்கலாம்; குழந்தைகளால் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது!

43