பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டு, குடையையும், கூடையையும் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டது.

அம்மா போன பிறகு, முயல் குட்டிகள் நான்கும் பொந்தை விட்டு வெளியில் வந்தன. அந்த நான்கு குட்டிகளில், மூன்று குட்டிகள் மிகவும் நல்லவை. கடைக் குட்டி பீட்டர் இருக்கிறதே, அதற்குக் குறும்பு அதிகம். அம்மா சொல்லை அது கேட்பதே இல்லை. அது நேராக மாக்ரிகார் தோட்டத்தை நோக்கி ஓட்டம் பிடித்தது. தோட்டத்துக் கதவுக்கு அடியிலே, சிறிது இடைவெளி இருந்தது. அதன் வழியாக, அது உள்ளே புகுந்தது.

உள்ளே நுழைந்த பீட்டர், அங்கிருந்த காய்கறிகளை எல்லாம் கடித்துக் கடித்து ருசி பார்த்தது. ருசி பார்த்துக் கொண்டே தோட்டத்தைச் சுற்றி வந்தது. அப்போது அது தோட்டக்காரரைப் பார்த்து விட்டது. தோட்டக்காரரும், அதைப் பார்த்து விட்டார். அப்புறம்

45