பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சும்மா இருப்பாரா? தடியைக் கையில் எடுத்துக் கொண்டு, குறும்புக்காரப் பீட்டரைத் துரத்த ஆரம்பித்தார்.

பீட்டர் அங்குமிங்கும் ஓடியது. வந்த வழியே திரும்ப நினைத்தது. ஆனால், அதற்கு வழி தெரியவில்லை!

ஓடும் போது, பீட்டரின் காலில் இருந்த, செருப்புகள் இரண்டும், ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே விழுந்து விட்டன.. அதுவும் நன்மைக்குத்தான். செருப்பு இல்லாததால், பீட்டரால் மேலும் வேகமாக ஓட முடிந்தது. எளிதாக அது தப்பி ஓடியிருக்க முடியும். ஆனாலும், அதன் துர்அதிர்ஷ்டம், வழியிலிருந்த ஒரு முள் செடியில் அதன் சட்டை மாட்டிக் கொண்டு விட்டது. பீட்டர் பலமாக இழுத்து, இழுத்துப் பார்த்தது. சட்டையை எடுக்க முடியவில்லை. ‘இனியும் இங்கிருந்தால் ஆபத்து’ என்பதைத் தெரிந்து கொண்டது பீட்டர்,. சட்டையை அங்கேயே விட்டு விட்டு ஓடியது.

பீட்டர் ஓடிச் செல்லும் போது, வழியிலே ஒரு கூடம் இருந்தது. தோட்டச் சாமான்கள் போட்டு வைக்கும் அந்தக் கூடத்துக்குள் பீட்டர் நுழைந்து ,அங்கிருந்த ஒரு பூவாளிக்குள் தாவியது, அந்த வாளி காலியாக இருக்கக் கூடாதா? அது நிறையத் தண்ணீர் இருந்தது! பீட்டரால் உள்ளே இருக்க முடியவில்லை. ஆயினும், என்ன செய்வது?

துரத்திக் கொண்டு வந்த தோட்டக்காரரும், அந்தக் கூடத்திற்குள் வந்து விட்டார். கூடத்தின் மூலை, முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தார்; பீட்டரைக்

46