பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேகமாக ஓடியது. தோட்டக்காரரும் அந்த ஜன்னல் வழியாகக் குதித்திருப்பார். நல்ல காலம், அந்த ஜன்னல் சிறியதாயிருந்தது. அதனால், அவரால் குதிக்க முடியவில்லை. அலுத்துப் போய், அவர் திரும்பிச் சென்று விட்டார்.

பீட்டர் தோட்டத்தின் ஒரு மூலையில் போய், அங்கே உட்கார்ந்து இளைப்பாறியது. அப்போது சுற்றுச் சுவரில் ஒரு கதவு தெரிந்தது. அந்தக் கதவு நன்றாகப் பூட்டப்பட்டிருந்தது. அதன் அடியிலே, சிறிது இடைவெளி இருந்தது. அதன் வழியாக, ஒரு கிழட்டு எலி காய்கறிகளைத் திருடிக் கொண்டு, போவதும், வருவதுமாக இருந்தது. ஆனால், அந்தச் சின்னஞ்சிறு இடைவெளி வழியாகக் கொழுத்திருந்த பீட்டரால் எப்படிப் போக முடியும்? எலியைப் பார்த்து, “வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று பீட்டர் கேட்டது. அந்தக் கிழட்டு எலி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பிறகு, அங்கிருந்த ஒரு குட்டையின் ஓரமாக உட்கார்ந்திருந்த வெள்ளைப் பூனையிடம் சென்றது. அதனிடம் வழி கேட்க நினைத்தது. ஆனால், கேட்கவில்லை. காரணம், பூனை என்றாலே பீட்டருக்குப் பயம் அதிகம்!

வெகு நேரம் இங்கும் அங்குமாக அலைந்தது. கடைசியில், தற்செயலாகத் தான் வந்த வழியைக் கண்டு பிடித்து விட்டது. உடனே; அந்தக் கதவு இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடியது. வழியில் தோட்டக்காரர் நின்று கொண்டிருந்தார். ஆனாலும், நல்ல காலம், அவர் பீட்டரைப் பார்க்கவில்லை. பீட்டர் கதவின் அடியிலே ‘விருட்’டென்று புகுந்து வெளியேறி விட்டது. பிறகு, திரும்பிப் பார்க்கவே

48