பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொங்கியது. “அம்மா அம்மா! இந்தக் குறும்புக்கார முயல் குட்டியின் கதை எவ்வளவு நன்றாக இருக்கிறது! நல்ல, நல்ல படமெல்லாம் இருக்கிறது. அம்மா. இதோ பாரேன். கதையை நான் படிக்கட்டுமா, அம்மா? நீ கேள் அம்மா” என்று மகிழ்ச்சியோடு கதையைப் படிக்கத் தொடங்கினான். அப்போது அவனுடைய அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ஒரே ஆனந்தம்!

“கடிதம் கிடைப்பதற்கு முன்பு இவனுடைய முகம் எப்படி வாடிப் போயிருந்தது! இப்போது எவ்வளவு மலர்ச்சியோடு இருக்கிறது! என் சிநேகிதிக்கு நான் மிகவும் நன்றி செலுத்த வேண்டும்” என்று மனமாரக் கூறினாள்.

அன்று அந்தச் சிறுவனை மகிழ வைத்த கதை, இன்று எத்தனை, எத்தனையோ சிறுவர்களை மகிழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கதை, முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. ஆனால், தற்போது உலகிலுள்ள பல மொழிகளில் வெளி வந்துள்ளது. தமிழில் கூட. ‘முயல் குட்டி முத்து’ என்ற பெயருடன் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.

எந்த மொழியில் இந்தக் கதை வெளி வந்தாலும், அதில் காணப்படும் படங்கள் பியேட்ரிக்ஸ் பாட்டர் அன்று வரைந்த படங்களை அநுசரித்தே இருப்பதைக் காணலாம். காரணம், அவர் வரைந்த படங்கள் மிகவும் அழகான படங்கள்; உயிருள்ள படங்கள்; குழந்தை உள்ளம் கவரும் படங்கள். ஒருவரே கதையையும் எழுதி, அதற்கு ஏற்ற படங்களையும் வரைவதென்பது மிகவும் அபூர்வம். அதிலும், உலகம் புகழும் ஒரு கதையை எழுதி, அதற்கேற்ற படங்களையும் பியேட்-

51