பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்போது சிறுமியாயிருந்த பாட்டருக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். யார் அந்த நண்பர்கள்? முயல், அணில், வாத்து இவைகள்தாம்! இவைகளுடன் நெருங்கிப் பழகப் பழகப் பாட்டருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. பகலெல்லாம் அந்த நண்பர்களோடு விளையாடுவார்; இரவிலே அந்த நண்பர்களை வைத்து, ஏதேனும் கற்பனை செய்து கொண்டேயிருப்பார். அவருடைய கற்பனை வீண் போகவில்லை. பிற்காலத்தில், முயல் குட்டி பீட்டரைப் போல், பற்பல அற்புதமான கதைகளை எழுதுவதற்கு அந்தக் கற்பனைதான் அவருக்கு மிகவும் உதவியாயிருந்தது.

பியேட்ரிக்ஸ் பாட்டரை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்கரமல், ஸ்காட்லாந்திற்கு அழைத்துச் சென்றது குழந்தைகளுக்கெல்லாம் நன்மையாக முடிந்தது. அங்கு சென்றதால்தானே, முயல், அணில், வாத்து முதலியவைகளுடன் பாட்டரால் பழக முடிந்தது? அப்படிப் பழகியதால்தானே, அழகான கதைகளையெல்லாம் குழந்தைகளுக்காகக் கூற முடிந்தது?

பாட்டர் வளர, வளர அவரது கற்பனைகளும் வளர்ந்தன. ஆயினும், அவருக்கு நகர வாழ்க்கை பிடிக்கவே இல்லை. லண்டனை விட்டு, எங்கேனும் ஒரு கிராமத்திற்குப் போய், நிம்மதியாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பார். ஆனாலும், தாய் தந்தையர் அதற்கு அப்போது இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், கிராம வாழ்க்கையை நினைத்துக் கொண்டே அணிலையும், முயலையும், வாத்தையும் கதாநாயகர்களாக வைத்துக் கதைகளை எழுதி வந்தார்.

முப்பத்தைந்து வயது ஆவதற்குள், அவருடைய கதைகள் புகழ் பெற்று விட்டன. உலகத்தின் பல

54