பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதாசிரியரான
கணித ஆசிரியர்!


ஆலிஸ் ஒரு சிறுமி. அவளும் அவளுடைய அக்காளும் ஒரு நாள் ஓடைக் கரையில் உட்கார்ந்திருந்தார்கள். அக்காள் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். ஆலிஸ் எட்டி எட்டி அந்தப் புத்தகத்தை இரண்டு மூன்று தடவை பார்த்தாள். "ப்பூ! இது என்ன புத்தகம்! படமும் இல்லை; சம்பாஷணையும் இல்லை. படமும் சம்பாஷனையும் இல்லாத புத்தகம் ஒரு புத்தகமா?" என்று அலுத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவளது கண்கள் சுழன்றன. தூக்கம் வந்துவிட்டது.

திடீரென்று அவ்வழியாக ஒரு வெள்ளை முயல் ஓடிவந்தது. அது கோட்டு அணிந்திருந்தது. கோட்டுப் பையிலிருந்த தங்கக் கடிகாரம் ஒன்றை வெளியில்

5