பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எடுத்து மணி பார்த்து விட்டு, “அடடா, இன்றும் நேரமாகி விட்டதே!” என்று கூவிக் கொண்டே, மேலும் வேகமாக ஓடியது. கோட்டுப் போட்டுக் கொண்டு, கடிகாரம் வைத்திருக்கும் முயலை, சிறுமி ஆலிஸ் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவளுக்கு ஒரே வியப்பாக இருந்தது. உடனே அவள் எழுந்தாள்; முயலைத் தொடர்ந்து ஓட ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு பெரிய பொந்து இருந்தது. அந்தப் பொந்துக்குள் முயல் ‘குப்’ பென்று பாய்ந்தது. அடுத்த விநாடி ஆலிஸும் அந்தப் பொந்துக்குள் குதித்தாள். குதித்த ஆலிஸ், உருண்டு, உருண்டு கீழ் நோக்கிப் போய்க் கொண்டேயிருந்தாள். அவள் மிகவும் மெதுவாக உருண்டாளோ அல்லது அந்தப் பொந்துதான் மிக மிக ஆழமாக இருந்ததோ, அவள் அடியிலே போய்ச் சேர வெகு நேரமாயிற்று.

6