பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பிராயச்சித்தம்

பரமசிவத்தின் தகப்பனார் சர்க்கார் சம்பளக்காரர். போலீஸ் சப் இன் ஸ்பெக்டர். இரண்டு கைகளாலும் திரு மகளை வரவேற்பவர். அநேகமாக அவர் ஒ வ் .ெ வ ர ரு. வருஷத்திலும் தம் சொந்த ஊராகிய திருமானூரில் குறைந்த பகஷம் ஒர் ஏகார நிலமாவது வாங்காமல் இருப்பதில்லை. தம்முடைய பிள்ளையாகிய பரமசிவத்தை அவர் செல்லம் .ெ க ச டு த் து வளர்த்தார். அவருடைய முரட்டுத்தனமே. அவனுக்கும் படிந்திருந்தது. ஆனாலும் அவன் உள்ளத்திலே கனிவின் முனை இருந்தது. -

பார்வதியின் கன்னத்திலிருந்த வீக்கம் குறைய இரண்டு நாட்கள் ஆயின. உத்தியோகஸ்தன்.அதிலும் போ லீ ஸ் உத்தியோகஸ்தன்-பிள்ளை அ டி த்'து விட்டால் கேட்பார் யார்? இரண்டு நாள் கசுமுசுவென்றிருந்த சண்டை பிறகு ஓய்ந்து விட்டது. ஒருவர்க்கொருவர் பேசுவதில்லை என்ற முடிவோடு அந்தக் கலக அத்தியாயம் முடிந்தது.

அவ்விரண்டு வீட்டார்களும் ஒரு வ ரோ டு ஒருவர் பேசாமல் மெளனம் சாதித்தார்கள் என்பது வாஸ்தவந்தான்; ஆனால், அந்தக் குழந்தைகள் இருவர் மனத்தில் மாத்திரம் அ ைம தி ஏற்படவில்லை; ஒருவகையான கொந்தளிப்புத் தான் உண்டாயிற்று.

பாவம் எவ்வளவு பெரியதாக விங்கிப் போய் விட்டது: நான் அந்தப் பூவைத் திருடியது முதல் குற்றம்: அவளை அடித்தது இரண்டாவது குற்றம். நான் அடித்த போது அப்படியே அவள் சு ரு ண் டு விழுந்து விட்டாளே! நான் மிகவும் கெட்டவள். அவள் என்னை அடித்ததனால் எனக்கு வலி கூட ஏற்படவில்லையே. அவள் அடித்தது மூன்றாம் பேருக்குத் தெரியாதே. நான் செய்த பிசகுக்காகத்தானே அவள் அடித்தாள்? னோ அவளைப் பேய் போல அல்லவா அறைந்து விட்டேன்! ஊரே கூடி விட்டதே. இந்த மாதிரி அசட்டுக் காரியம், அக்கிரமமான காரியம், நான் செய்தேன். இப்போதே ஒடிப் போய்ப் பார்வதி காலி ல் விழுந்து மன்னிப்புக் கேட்கட்டுமா? அ வ ள் எ ன் ைன ராக்ஷஸன் என்று தானே நினைப்பாள்? நம்முடைய அப்பா