பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 26 கர்த்தப விஜயம்

அவளைக் கண்டு மோகித்துத் தாமும் ஆண் குதிரை வடிவம் எடுத்து அளவளாவினாரே. அவரை மயக்கிய ஊர்வசியின் வடிவம் இப்படித்தான் இருந்திருக்குமோ !” . இருந்திருக்குமோ என்ற சந்தேகம் என்ன? ஊர் வசிக் குத் தன்னுடைய தெய்வத் திருமேனியின் அழகிலே சலிப்பு வந்திருக்கும். இன்னும் வனப்பு மிக்க ரூபத்தை எடுக்க வேண்டுமென்று ஆசைப் ப ட் டி ரு ப் ப ா ள். இந்த வடவையின் எழிலைக் கண்டு இம்மாதிரியே ரூபம் எடுத்து இருப்பாள். அவளுக்கு இத்தனை ரூபம் அப்போது கிடைத்திருக்குமோ என்பது சந்தேகந்தான். '

உச்சைசிரவத்தின் காதில் இந்தச் சம்பாஷணை விழவே, விஷயத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தூண்டத் திடீரென்று அந்தக் குதிரைகளின் முன்னே போய் நின்றது. அதைக் கண்டவுடன் பச்சை மாக்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு, பரிக் குலத்தின் சுடர்க்கொழுந்தே, இந்திரனின் பவனியைச் சிறப்பிக்கும் அசுவ அரசனே, பாற்கடலில் அவதரித்த பஞ்ச கல்யாணக் குதிரைப் பிரானே, வருக, வருக’’ என்று எ வாகதம் கூறின.

'உங்கள் வருணனைப் பேச்சை நீங்கள் ஏன் நிறுத்தி விட்டீர்கள் ? எனக்கும் அது தெரிவதால் தோஷம் ஒன்றும் இல்லையே' என்று நேரே விஷயத்துக்கு வந்து விட்டது வாசவன் வாகனம்.

பச்சைப் பாய்மாக்கள் ஒன்றை யொன்று திகைப்புடன் ப ர் த் துக் கொண்டன. விஷயத்தைச் சொல்லலாமா. வேண்டாமா என்ற கே ள் வி அ ந் த ப் பார்வையிலே தோற்றியது.

'என்ன யோசிக்கிறீர்கள் ? நான் அருகிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இ ரு ந் தேன். எங்கள் தேவ ராஜாவின் நடன ராணியாகிய ஊர்வசியே கண்டு மயங்கிய அந்த வடவாங்கனாமணி யார் ??’ என்று உச்சைசிரவமே கேட்டு விட்டது. அ ப் புற ம் ஒளிமறைவாக வைப்பதில் என்ன லாபம்? இந்தச் சாக்கில் வடவையின் ரூபலாவண்ய