பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fog கர்த்தப விஜயம்

மகளிருடைய ஸல்லாபத்திலே ஒன்றியிருந்தான். இதுதான் சமயமென்று தெரிந்த உச்சைசிரவம் மெல்ல அங்கிருந்த, உச்ச சிகரத்தை அடைந்து வட கடலைப் பார்க்கும்போது அதன் கண்ணிலே வடவையின் உருவம் பட்டது. 'ஆஹா!' என்ன அழகு! என்ன லலித குஸ் மாங்கம் அந்தப பைத்தியக்காரக் குதிரைகளுக்குச் சரியாக வருணிக்கத், தெரியவில்லையே. பூரீ வாக்தேவியின் திருவருளால் நாம் கவியானால் சிறிது வருணித்துப் பார்க்கலாம். என்ன

ஒய்யாரம்! என்ன உல்லாசம் : ம ந் த மாருதத்திலே

அசையும் கற்பக விருகூடித்தின் பல்லவங்களுக்கு இந்த நெளிவு வருமா ? சூரியனுக்குத்தான் இ ந் த க் காந்தி

வருமா? என்ன ஜோதி மயமான தேகம்! .

'ஹே அசுவ சுந்தரி ஹே சமுத்திர வாஸினி, உனக்கு இந்த வடிவழகைத் தந்த பரமேசுவரன் உன் மனத்தை மாத்திரம் கல்லாகப் படைத்தானோ சர்வ லோகங்களும் உன்னுடைய மோகன நடனத்திலே மயங்கி விடுமென்று எண்ணியோ இந்த வ ட புற ப் பெ ரு ங் கடலிலே யார் கண்ணுக்கும் படாத இடத்திலே கொந்தளிக்கும் அலைக் கூட்டத்தினிடையே உனக்கு ராஜதானி ஏற்பட்டது? நீ இங்கே இருக்க வேண்டுமென யாரேனும் சாபமிட்டார் களோ!-ஆஹா, உன்னுடைய லாவண்ய அம்புராசி நீ. வீற்றிருக்கும் பெருங்கடலைக் காட் டி லும் விரிவாக இருக்கிறது. நீ தலை நிமிர்ந்து நிற்கும் கோலத்தைக் கண்டு அந்த அலைகள் தாம் தாம் அந்த மாதிரி நிமிர்வ. தாகச் சண்டையிட்டு மோதி உருக்குலைந்து சிதறித் துளித் துளியாகின்றனவே! இது என்ன பரிதாபம் வெறும் அலைகளுக்கே இவ்வளவு மோகம் உண்டானால் நீ வேறு. இடத்தில் இருந்தால் சர்வ ஜீவர்களுடைய மனங்களும் உன்னை விரும்பி வந்து மோதி மோதி மாண்டொழியும், அல்லவோ? ...... -

'உன்னைக் காணக் கிடைத்தது என் பாக்கியம். கண் பெற்ற பயனை இ ன் றே அடைந்தேன். ஆம். இந்தக் காட்சியிலேயே இவ்வளவு ஆ ன ந் தம் இருக்குமானால்;