பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 145

பாவம் உலகம் உம்மைப் பயமுறுத்தி விட்டது. இப்பொழுது விஷயத்தை விளக்குகிறேன், கேளும். நான் ஒரு சினிமாக் கம்பெனியின் சொந்தக்காரன். எங்கள் கம்பெனியில் பல வகையான நாடகங்கள் தயாராகின்றன. மிகவும் லட்சண மான நடிகர்கள் எங்கள் வசம் இருக்கிறார்கள். அவர் களுக்கெல்லாம் தக்க சம்பளம் கொடுத்து வருகிறோம். இந்தியாவிற் பிரசித்தி பெற்ற சினிமாக்களுள் எங்க ளுடையதே முதன்மையானது. ஆனாலும், இப்பொழுது எங்கே பார்த்தாலும் போட்டி பலமாக இருக்கிறது. நாம் ஒன்று செய்தால் அதே ம தி ரி மற்றொருவன் ஒன்று செய்து போட்டி போடுகிறான். ந | ங் க ள் அமைக்கும் கதை நிகழ்ச்சியின் போக்கும் அந்த அந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு கொடுக்கும் வேலையும் மேனாட்டாரும் மதிக்கத் தக்க புகழை எங்களுக்குக் கொடுத்திருக்கின்றன. வட நாட்டுக் கம்பெனிகளிற் சில எங்கள் முறையைப் பின்பற்றி வருகின்றன. அழகிய பெண்களும், ஆடவர்களும் தேசம் முழுவதும் நிரம்பி இருக்கிறார்கள். ஆகையால் ஊருக்கு ஒரு சினிமாக் கம்பெனி ஆரம்பித்தாலும் நடிகர்கள் கிடைப் பார்கள். உ. ம. க் கு நான் சொல்லிக் கொண்டு வருவது விளங்குகிறதா ?’’ - -

'ஆகா! விளங்குகிறது.'

"ஆகையால், நாங்கள் எவ்வளவு அழகான நடிகர் களைச் சம்பாதித்தாலும் அவர்களை விட மேலானவர்கள் மற்ற கம்பெனிகளுக்குக் கிடைத்து விடுகிறார்கள். இந்தக் காரணத்தால், எங்களுடைய புகழுக்கு ஒன்றும் குறை இல்லாவிட்டாலும், மேலும்மேலும் புதிய புதிய நாடகங்களை அமைத்து உலகத்தாருடைய உயர்ந்த மதிப்பைப் பெற முடியவில்லை. பழைய புகழின் ஒளியில் ஆடி வருகிறோம். எனவே புதுமுறை ஒன்றைக் கைக்கொண்டால் அதனால் புதிய கீர்த்தியைச் சம்பாதிக்கலாம் எ ன் று நெடுங்காலம் யோசித்தேன். ஸ்திரி வேஷங்களை ஆண்களுக்கும் ஆண் வேஷத்தைப் பெண்களுக்கும் போட்டு நடிக்கச் செய்ய லாமோ?' என்பது போன்ற எவ்வளவு பைத்தியக்கார