பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அவலக்ஷணத்தின் விலை

வாரங்களும், இன்னும் எங்கெங்கோ பல வாரங்களும்

ஓடியது. மேல் நாட்டுக்குக்கூடப் போய் வந்தது.

என் நடிப்பை எல்லோரும் சிலாகித்தவண்ணமாக இருக்கிறார்கள். மிகவும் திறமையுள்ளவர்களாலும் பின், பற்ற முடியாத சிறப்புடையதென்று சொல்லிக் கொள் கிறார்கள். எல்லாவற்றையும்விட, எ ன் அவலட்சணத் துடன் போட்டி போடுபவர் இந்த உலகத்தில் எங்கும் இல்லையென்பது எங்கள் கம்பெனியின் சிறப்புக்கு முக்கிய காரணம். - -

மந்திரி மகனாக நடித்த கதைக்குப் பிறகு பூதமாகவும், ராட்சசனாகவும், பிசாசாகவும், வேதாளமாகவும் நடித்த கதைகளுக்கு அளவில்லை. கதாநாயகனாக நான் நடித்த கதைகள் பல. என்னுடைய பெயர் ஜே. ஆர். மன் என்று மாறிவிட்டது. மாஸ்டர் ஜே. ஆர். மன்னைப்பற்றி நாள் தவறாமல் பத்திரிகைகள் எழுதுகின்றன. அவனுக்காகப் புதிய கதையை ஜோடிக்க இரண்டு கதாசிரியர்கள் பேனா வும் கையுமாக இருக்கிறார்கள். என்னை இந்தத் துறையில் புகுத்திய அந்த மகாப்பிரபு இந்தக் கம்பெனியின் லாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுக்கிறார். எனக்குத் தனிப் பங்களா; வேலையாள் முதலியவர்கள் உண்டு.

இந்தக் கூத்தில் ஒன்று கேட்டாயா! என் உருவத்தைக் கண்டு என்னைக் காதலிக்கும் பெண் இருக்கப் போவ தில்லையென்பது நிச்சயம். ஆனால் . இதுவரைக்கும் பத்துப் பேருக்குமேல் என்னைக் கல்யாணம் செய்து, கொள்ளப் பெண்கள் வந்தார்கள். வெறும் பணத்திற்காக வேண்டுமானால் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள லாமே ஒழிய என் லக்ஷணத்திற்கு அவர்கள் ஜோடியல்ல என்பது எனக்குத் தெரியும். நான் பிரமசாரியாகவே காலம் கழிக்க உத்தேசித்து விட்டேன். - . . . . .

நான் சம்பாதிக்கும் பணமெல்லாம் என் அவலக்ஷணத். தால் வந்ததுதானே? அதற்கு நான் என்ன ைகம் மாறு செய்யப் போகிறேன்! ஒரு பெருந் தொகையைச் சேர்த்து அவலட்சணமான ஸ்தீரி புருஷர்களுக்கு ஏதாவது ஒரு