பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சதானந்தர் ஒரு துற வி: காவி வஸ்திரம் கட்டா விட்டாலும் உண்மையான துறவி. எனக்கு அன்பர். எல். லோருக்குமே அன்பர். எங்கள் ஊரு க் கு அவர் வ ந் து பதினைந்து வருஷங்கள் ஆயின. வந்த புதிதில் அவரைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. அவர் ைக யி ல் சிறிது பணம் வைத்திருந்தார். அதைக் கொண்டு அங்கே ஒரு சிறிய குடில் கட்டிக் கொண்டார். அதைத்தான் எங்கள் ஊரினரும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் ஆ சி ர ம ம் என்று சொல்வார்கள். அங்கே தூய்மை நிலவும். குப்பை என்பது சிறிதும் இராது. அவ்வளவு சுத்தமாக சதானந்தர் அதை வைத்திருந்தார்.

காலையில் ஸ்நானம் செய்து பூஜை செய்வார்; சிறிது நேரம் தியானத்தில் அமர்வார். பிறகு தேவாரம். திரு வாசகம் முதலிய பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவார். அவர் செய்யும் பூஜைக்கும் தியானத்துக்கும் காலவரையறை உண்டு. ஆனால் அவர் பாடுவதற்குக் கணக்கே இல்லை. ஒரு மணி காலம் பாடுவார்; இரண்டு மணியும் பாடுவார்: சில நாள் தம்மையே மறந்து மணிக் கணக்காகப் பாடிக் கொண்டே இருப்பார். பகல் ஒரு மணிக்கு ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு வரும்; உண்பார் பிறகு பரோபகாரமாக மருந்து செய்வதைக் கவனிப்பார். -

அவர் சித்த வைத்தியத்தில் நல்ல தேர்ச்சி உள்ளவர். தினந்தோறும் அவரிடம் நோயாளிகள் மாலை வேளையில் வருவார்கள். அவசரமான சந்தர்ப்பங்களில் அபாயகரமான நோய்க்கு உட்பட்டவர்களைப் பார்க்க வேண்டுமான்ால் காலை வேளையில் போய்ப் பார்த்து வருவார். பிறகுதான் பூஜை முதலியன நடைபெறும்.

அவருடைய அன்பு ததும்பும் வார்த்தைகளே நோயை ஒரு பாதி குணமாக்கி விடும். மருந்தின் குணமும் சேர்ந்து கொள்ளும்; மருந்து இல்லாமலே ஸ்நான பானங்களாலும் உணவுப் பக்குவத்தாலும் நோயைத் தீர்ப்பதில் அவருக்கு