பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விடுதலை

அந்தத் தொழிலைப் பாதகம் இல்லாமல் செய்யவும் முடியும். மூலிகைகளையும் லோஹங்களையும் வேறு சரக்கு களையும் கொண்டு செய்யலாம்' என்றார்.

எனக்கு வைத்திய வி ஷ ய த் தி ல் சிரத்தையோ பரிசயமோ இல்லை. ஆகையால் அவரோடு பழகினாலும் மருந்து செய்வதைப் ப ற் றி ேயா, இன்ன நோய்க்கு இன்ன பாரிகாரம் என்பதைப் பற்றியோ நான் தெரிந்து கொள்ள மு; ய ல வி ல் ைல. அ வ ரு ம் தெரிவிக்கவில்லை. *லுவத்தில் ம. ரு ந் து அரைக்கும் போது மருந்தரைக்கும் குழவிக்கு அடுத்தபடியாகவே நான் இருந்தேன். எனக்கு வேண்டியது அவர் பாட்டு. அந்தப் பாட்டிலே நான் என் மனோவிகாரங்களையும் க ல க் க ங் க ைள யு ம் போக் கிக் கொள்ளும் மருந்தைக் கண்டேன். -

இப்படிப் பன்னிரண்டு வருஷங்களாக அவரோடு நான் பழகி வருகிறேன். என் உடல் வளர்ந்தது. அவர் தாடி வளர்ந்தது. ஆனால் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அவருடைய பூர்வ சரித்திரத்தில் எவ்வளவு தெரிந் திருந்ததோ அவ்வளவுதான் இன்றும் தெரிந்தது. அவர் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை . சூரியன் உதிக் கிறான். அஸ்தமிக்கிறான்; சந்திரன் தேய்கிறான், வளர் கிறான்: ; பல ஆயிர வருஷங்களாக ஒரே மாதிரி நடந்து வரும் இந்த நிகழ்ச்சிகளிலே என்ன மாறுபாடு இருக்கிறது? ஒன்றும் இல்லை. அந்த இயற்கை நியதியோடு ஒன்று பட்டவரைப் போலவே சதானந்தரும் இருந்தார். அன்று கண்ட கோலம், அன்று செய்த தொழில், அன்று பாடிய பாட்டு, அன்று ;மெய்ம்மறந்து நின்ற நிலை - எல்லாம் இன்றும் உள்ளன.

இப்படிச் சென்று கொண்டிருந்த போது அன்றைக்குத் தான் அந்தப் புதிய மாறுதலைக் கண்டேன்; அவரது புதிய பேச்சைக் கேட்டேன்; சிறை, விலங்கு. பந்தம், விடுதலை, சுதந்திரம் என்ற வார்த்தைகளைத் தம்மோடு இணைத்துச் சொன்னார். இவ்வளவு வருஷங்களாக அடக்கி வைத்திருந்த உ ண ர் ச் சி பீறிக்கொண்டு வந்திருக்க