பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விடுதலை

சதாசிவமும் தங்கமும் மிகவும் அ ன் போ டு பழகி வந்தனர். மாசு மறுவற்ற அன்பு அது. அவன் நன்றாகப் பாடுவான். அவர்கள் வீட்டுக்கு வரும் சாமியார்களுள் சில பேர் அவனுக்குத் தேவார திருவாசகங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அ வ ற் ைற அவன் இனிமையாகப் பாடுவான் . தங்கம் கேட்டுக் கேட்டு மகிழ்வாள். அவனை அவள் அத்தான் முறை வைத்து அ ைழ த் து வந்தாள். "அத்தான், நீ பாடும்போது எனக்கு என் ஞா. ப க ேம இருக்கிறதில்லை. எனக்கு நீ .ெ சா ல் லு ம் பாட்டுக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் நீ பாடுகிறபோது ஏதோ மலையின் உச்சிக்குப் போகிற மாதிரி இருக்கிறது ' என்று அவள் பாராட்டுவாள். அந்தப் பாராட்டு சதாசிவத்தின் உள்ளத்தைக் குளிர்விக்கும். அதைப் பா டு, இதைப் பாடு’’ என்று அடிக்கடி அவள் கேட்பாள். சதாசிவமும் பாடிக் காட்டுவான். இந்த உறவு முற்றித் தாங்கள் எதிர் பார்த்தபடி அ வ ர் க ள் வாழ்வார்களென்று அண்ணனும் தங்கையும் எண்ணி எண்ணி இன்புற்றார்கள். தங்கத்தின் மன சிலும் அந்த எண்ணம் முளைத்தது. ஆனால் அந்த அப்பாவி சதாசிவம் இருக்கிறானே, அவனுடைய போக்கே தனியாக இருந்த து. தன் தந்தை, அத்தை, தங்கம் என்னும் மூ வ ரு ைட ய உள்ளத்திலும் த ன் ஒரு நம்பிக்கையை வளர்த்து வந்ததை அ வ ன் சிறிதும் உணரவில்லை. -

அவனுக்கு வயசாகி வந்ததே யொழிய அதற்கேற்ற லெளகீக ஞானம் ஏற்படவில்லை. தன்னை நோக்கி வளரும் தங்கத்தை அவன் கண்கள் நன்றாக கவனிக்கவில்லை. அவள் உள்ளத்தே வளரும் காதற் போக்கையும் அ வடன் ஊகித்தறியாத முட்டாளாக இரு ந் தா ன். தாயுமானவர் பாட்டும், தேவாரதிருவாசகமுமே அவனுக்கு இன்பமளிக்கப் போதியனவாக இருந்தன. போதாக் குறைக்குச் சாமியார் களுடைய பழக்கம் வேறு ஏற்பட்டது. -

ஏதோ ஒரு நாள் அவனுடைய முன்னிலையிலே அவன் அத்தை தன் க ரு த் ைத வெளிப்படையாகச் சொல்லி,