பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பியின் கனவு

(ஒரு ஸ்தல புராணத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்த வரலாறொன்று இந்தப் பகற்கனவைக் கிளப்பி விட்டது.) .

கையிலே ஒரு சிற்றுளி இடையிடையே என்னவோ முணுமுணுப்பு. இந்தக் கோ ல த் தி ல் காட்சியளித்தான் சிற்பி. அவனுடைய தேகத்தில் முறுக்கு இல்லை . ஆனால் தளர்ச்சியும் இல்லை. தான் மேற்கொண்ட காரியத்தைக் கண்ணும் கருத்துமாக இரு ந் து முடித்துவிடும் தைரியம் அவனுக்கு இருந்தது. ஒரு சிறு குடிசையிலே இரவெல்லாம் படுத்துச் சிந்தனை செய்வதும் பகல் முழுவதும் கல்லைக் கொத்திச் செப்பஞ் செய்வதுமாகிய வேலையில் ஈடுபட்டு இருந்தான். அவனுடைய வீ ட் டு க் கு ப் பக்கத்திலுள்ள தோப்பிலே இருந்தது அந்தக் குடிசை. புற உலகத்தின் குழப்பம் அணுகாமல் தனியே இரு ந் து தனது சிற்ப சிருஷ்டியை அவன் செய்து வந்தான்.

அவனது இளமைக் காலத்தில் அவன் கை செய்த வேலைகளுக்குக் கணக்கு இல்லை. சிற்பத் .ெ த ழி லி ல் அவன் கைமட்டுமா வேலை செய்தது? அறிவும் வேலை செய்தது. அவனுக்குச் சம்ஸ்கிருதம் தெரியும். ஆகம சாஸ் திரங்களைப் படித்திருக்கிறான். கோயில் நிர்மாணத்தில் அவன்தான் அக்காலத்தில் உரையாணியாக இருந்தான். விக்கிரக லட்சணங்களின் சம்பந்தமாக உள்ள ஏட்டுச் சுவடிகளெல்லாம் அந்தக் குடிசையிலே அவ னு க் குத் துணையாக இருந்தன. ஏதேனும் ஒரு மூர்த்தியைப் பற்றி அவனிடம் யாராவது பேசத் தொடங்கினால், உடனே கடகடவென்று அந்த மூர்த்தியின் தியான சுலோகத்தை ஒப்பிப்பான். தமிழ் நாட்டுக் கோயில்களில் அவன் சிருஷ் .டித்த மூர்த்தி கரம் மிக்க விக்கிரகங்கள் பல. அ வன் கை ராசியை எல்லோரும் புகழ்ந்தார்கள். பணம் சம்பாதித் தான் . புகழும் சம்பாதித்தான்.