பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 55

ஆராய்ந்து சிறுகச் சிறுக அமைத்த அதில் அவன் தன் கைத் திறமையையும் கற்பனைத் திறமையையும் ஆகம சாஸ்திர அறிவுத் திறமையையும் காட்டியிருந்தான். விக்கி ரகம் தத்ரூபமாக எழுந்து .ே பசு வ து போல் இருந்தது. அதன் முகத்திலே என்ன அழகு கல் ைல இரும்பினால் செதுக்கி உயிர் முட்டி விட்டான் கலைஞன். . . . . கண் திறக்க வேண்டியதுதான் பாக்கி. குன்றின் மேல் கோயில் கட்டுவதற்கு வேண்டிய எற்பாடுகளைச் .ெ ச ய் ய வேண்டியதுதான். அந்தக் கோயில் பெரிதாக இருக்க வேண்டுமென்று அவன் விரும்பவில்லை. - -

இப்போது நிலைக்க ஒரு பீடமும் நி ழ லு க்கு ஒரு கூாையும் இருந்தால் போதும். பிறகு இந் த மூர்த்திக்கு எல்லாம் தானே வந்து விடும். இந்த மாதிரி விக்கிரகத் தை யாரும் எங்கும் பார்த்திருக்க மாட்டார்கள். பாருங் r இது என்ன வேலை செய்ய ப் போகிறதென்து. எவ் வளவு கோலாகலத்தோடு இது விளங்கப் போகிறதென்பதை நாம் ர் க் க க் .ெ கா டு த் து வைத்திருக்கிறோமr

இல்லையோ!’’-இப்படிக் கவிஞரிடம் சொல்லிக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டான் அவன்.

சிறு குடிசையிலே உண்டான இந்தச் சிருஷ்டி தமிழ் நாட்டையே ஒரு ஆட்டு ஆட்டப் போகிறது. அப்புறம் இந்தக் குன்று இப் படி யா இருக்கும் அடே அப்பா கோபுரங்களென்ன, மதில்களென்ன, மண்டபங்களென் ன. குளங்களென்ன, தவச் சாலைகளென்ன. தர்ம சத்திரங் களென்ன் - எல்லாம் இந்திர ஜாலந்தால் சிருஷ்டிக்கப் பட்டவை போல் இங்கே உண்டாகி விடப் போகின்றன. ஆம். இந்திர ஜாலத்துக்கு மேற்பட்ட ஜாலம் இந்தச் சிற்பக் கலை - அவன் ஆவேசம் வந்தவனைப் போல் பேசினான். ""நாளைக்கு இன்னும் இதை ஒரு முறை நன்றாகப் பார்த்து ஏதாவது கை வைக்க வேண்டிய வேலையிருந்தால் கவனித்து வெள்ளிக் கிழமையன்று கண்ணைத் திறக்கப் போகிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் வே ண் டும் ' என்று தன் தீர்மானத்தைக் கவிஞரிடம் அவன் சொன்னான்.