பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சிற்பியின் கனவு

நாரத முனிவர் பிரமதேவரிடம் முருகக் கடவு ைள த் திருமால் வழிபட்ட வரலாற்றைச் சொல்ல வேண்டுமென்று விரும்ப அவர் கூறலாயினார் :

முன்பு தாரகாசுரனோடு திருமால் பொருத காலத்தில் அவ்வசுரன் அவரது சக்கராயுதத்தைக் கைக் கொண்டு தன் மார்பில் ஆபரணமாகத் தரித்திருந்தான். மு. ரு க க் கடவுள் அவ்வசுரனைச் சங் கா ர ம் செய்த போது அவ் வாயுதத்தை எடுத்துக் கொண்டு தம் மார்பிற் பதக்கமாகத் தரித்தனர். அதனை உணர்ந்த திருமால் இந்த ஸ்தலத்தை அடைந்து முருகக் கடவுளை நோக்கித் தவம் புரியவே அக்கடவுள் எழுந்தருளி, நீ வேண்டிய வரம் யாது?’ என்று வினவினார். திருமால் பலபடியாகத் துதித்துச் சக்கராயுதத்தைப் பெற வேண்டுமென்ற தம் விருப்பத்தை உரைக்க முருகப் பெருமான் அதனைத் தம் மார் பி , இருந்து எடுத்து அளித்தனர். அதனைப் பெற்ற திருமால் அக்கடவுளைப் போ ற் றி வணங்கித் தம் இரு ப் பி ட , சென்றனர். - ..

முருக க் கடவு ள் சக்கராயுதத்தைத் தம் மார்பில் இருந்து எடுத்தமையால் அவ்விடத்திற் சிறிது பள்ளம் அன்று முதல் உண்டாயிற்று. . - ம்ார்பகங் குழிந்த திருவடை யாளம்

வயங்கிய திவ்வுல கத்தில் ஏர்பெற அதனைத் தெரிசனம் செய்தோர்

இடரொழிந் தின்பவீ டடைவார். & - . - ત્રી, ત્ર சிற்பியின் கனவு மெய்யாயிற்று: கவிஞரின் விருப்பம் நிறைவேறியது. இப்போது அந்தக் குன்றத்தில், அடே அப்பர கோபுரங்களென்ன, மதில்களென்ன, மண்டபங் களென்ன, குளங்களென்ன, தவச்சாலைகளென்ன், தர்ம சத்திரங்களென்ன - எல்லாம் இ ந் தி ரஜா லத் தால் சிருஷ்டிக்கப் பட்டவை போல் உண்டாகி விட்டன.