பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அஹிம்சை

சொல்லுவார்களே, அந்த வார்த்தை நிஜந்தான் போல் இருக்கிறதே?' என்றார் தாத்தா.

அவரை நான் வேறு எப்படிச் சொல்வது? எனக்கும். பாட்டனாரல்ல, பாட்டனாருக்குப் பா ட் ட ன ரு க் கு ப் பாட்டனார் இருந்தாரே ...... அவருக்கும் முந்தினவர். கிறிஸ்து பகவான் திருஅவதாரம் செய்து ஆயிரத்து ஐந்நூறு ஆண் டு க ள் கழித்து அவதரித்தவர் அவர்! அஹிம்சா பரமோ தர்ம: என்ற வேத வாக்கியத்தை ஒ வ் .ெ வாரு மூச்சிலும் கலந்து வாழ்ந்தவர். நான் இருபத்தைந்தாவது நூற்றாண்டில், அதாவது அந்தத் தாத்தாவுக்கு அப்புறம் ஆ யி ர ம் வருஷங்களுக்குப் பின் வாழ்பவன். அவருக்குத் .ெ த ரி ந் த து எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிந்தது. அவருக்குத் தெரியாது.

'இது எப்படியப்பா ஒடுகிறது? மாடு இல்லை, குதிரை இல்லை. சக்கரம் உருளுவதுகூடத் தெரியவில்லை. துளி கூடச் சத்தம் இல்லை. எப்படி இது இவ்வளவு வேகமாக, ஒடுகிறது?’’

அவர் இப்படிக் கேட்பது சிறிது பரிகாசமாகக் கூடப் பட்டது. வான வெளியில் தட்டாரப் பூச்சியைப் போலப் பறக்கும் ஆகாய விமானங்களையே எங்கும் பார்க்கும் என் காலத்தில் இந்தக் கர்நாடக மாவட்டையை, காரென்று சொல்லுகிற பொம்மை வண்டியை, நான் வைத்துக் கொண்டு ஒட்டுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. அதை அந்தத் தாத்தா குத்திக் காட்டும்போது நான் தலை குனிந்து கொண்டேன். பிறகுதான் தெரிந்தது, அவர் ஒ ன் று ம் விகற்பமாக எண்ணவில்லை என்று.

ஜலத்தினால்தான் ஒடுகிறது. முன் காலத்தில் ஒரு வி த ம | ண எண்ணெயால் ஒட்டினார்களாம். இப்போது, ஜலமே போதுமானதா யிருக்கிறது' என்றேன்.

என் பக்கத்தில் தாத்தா உட்கார்ந்திருந்தார். அவர் காரின் வேகத்தை பூரணமாக அனுபவித்தார். நடு நடுவே. சில வார்த்தைகளைப் பேசினார்.