பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சாதித் தடை

தம்பி, உன் இஷ்டம்போல் இரு: எனக்கு இருக்கிற ஆடுமாடுகள் நாலு குடும்பத்தைக் காப்பாற்றும். இந்த வீடு உன் சொந்த வீடு. உன்னைப் பிரிந்திருக்க முடியாது என்று என் மனசு சொல்கிறது. தம்பி, நான் சொல்கிறது தெரிகிறதா?’ என்று அன்பொழுகும் குரலில் பிச்சாண்டி பேசினான்.

  • அப்படியே இருக்கிறேன்’ எ ன் று வாக்குறுதி தந்தான் அவன். அதுமுதல் தம்பி’க்கு ஒரு குறையும் வராமல் பிச்சாண்டியும் அவன் மனைவி குப்பாயியும் பார்த்துக் கொண்டார்கள்.

யாரோ மகாராசா மாதிரியல்லவா இருக்கிறான்? அவன் முகத்திலே பால் வடிகிறதே ! என்ன அழகு அவன் என்ன சாதி ? எந்த ஊர்?' என்று கேட்டாள் குப்பாயி.

"மகாராசாவா தேவலோகத்திலிருந்து வந்தவன் என்று சொல்லு. அவன் முகத்தைப் பார்த்தாலே பசி போய் விடுகிறது. அவன் ஆராயிருந்தால் நமக்கென்ன? இப்ப்ொழுது நம்முடைய 'தம்பி நமது வீட்டுக்குத் தெய்வம் , நமக்குக் கண்மணி. முத்து எங்கே பிறந்தால் என்ன? தாமரை எங்கே முளைத்தால் என்ன ?’’ - பிச்சாண்டி கொஞ்சம் படித்தவன் ; பேசத் தெரிந்தவன். அவனுடைய பேச்சிலே படிப்பின் மெருகு இருக்கும். ஆனால் அவனுடைய உள்ளத்திலிருந்து வெளிப்படும் அன்பு மாத்திரம் அவன் பிறவியோடு வந்தது. குப்பாயியின் உள்ளம், பளிங்கு போன்றது. அதில் அன்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏதாவது மாசு படிந்தால் ஊதின மாத்திரத்தில் போய்விடும்.

செல்லத் தம்பியோடே வம்பளப்பதில் யாருக்கும் பிரியம் உண்டு. அவன் சொல்லும் தேசாந்தரக் கதைகளைக் கேட்பதில் ஊரிலுள்ள நரைத் தலையர்களுக்கு எல்லையற்ற

ஆசை. அவனைப் பார்ப்பதிலேயே இளம் பெண்களுக்கு

ஒர் ஆனந்தம்; காளிக்கோ பரமானந்தம். பிச்சாண்டியின் தங்கை மகள் காளி. பெயர்தான் காளி; அவள் அரச குலத்தில் பிறந்திருந்தால் அவளுக்கு ந ல் ல பெயராக