பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - - 91

'காளியைச் செல்லத் தம்பிக்குக் கட்டிக் கொடுக்க நினைக்கிறார்களாம். அவன் என்ன சாதியென்று தெரிய வில்லையாம். அதனால் தயங்குகிறார்கள்' என்ற பேச்சு ஊரில் எழுந்தது.

காளி உருகுகிறாள். சாதிக்கு ஆயிரம் சாபம் தருகிறாள். அவளுடைய தகப்பன் முருகனுக்கு வழி ஒன்றும் தெரிய வில்லை. தாய் மாறக்காள் ஒரே பிடிவாதமாகச் சாதியைப் பிடித்துக் கொண்டு தடுக்கிறாள். ஊரில் உள்ளவர்களுக்கு அந்தரங்கத்தில் ஏதோ ஒன்று இப்படிச் செய்தால் நல்லது." என்று சொல்கிறது; ஆனால் அதை வெளியிலே சொல்லத் ைத ரி ய மி ல் ைல. சாதியென்னும் பூதம் அவர்களைப் பயமுறுத்துகிறது. - - - -

பிச்சாண்டி, என் கண்ணுக்குக் கண்ணாலம் பண்ணி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்’ என்று துணிந்து விட்டான். சாதியை விட்டுத் தள்ளி விடட்டும், அதனால் ஒன்றும் நஷ்டமில்லை' என்ற ைத ரி யம் பிறந்தது. கு ப் பா யி க் கு ஒ ன் று ம் தோன்றவில்லை. யாராவது அதிகமாகச் சாதியைப் பற்றிச் சொல்லிப் பயமுறுத்தினால் சி றி து அஞ்சுவாள். பிச்சாண்டி தன் தீர்மானத்தையும் சாதிக் கொடுமையையும் பற்றிப் பேசினால் அந்த எண்ணம் உடனே போய் விடும்; அவன் கருத்தின் வழியே செல்லத் தொடங்குவாள். அவள் மனம் ஓர் ஒடம். பிச்சாண்டியின் மன மாகிய ஆறு போகும் வழியே அது ஒடும். நடுவிலே ஏதாவது தடுத்தால் சிறிது நேரம் கரையருகில் தங்கும். அடுத்த கணம் அடிக்கும் காற்றினால் மறுபடியும் அ ந் த. ஆற்றின் வேகத்தில் கலந்து விடும். -

காளியின் தகப்பனும் அந்தத் தீர்மானத்துக்கு வந்து விட்டான் மாறக் காளும் மனம் பொருந்தி விட்டாள். இனிமேல் கல்யாணம் நிறைவேறுவது நிச்சயம். -

இந்தச் சமாசாரம் ஊருக்குள் பரவியது. அப்புறம் ஊர் முழுவதுமே மாறி விட்டது. முன் போலச் செல்லத் தம்பியின் கதைகளுக்குக் கிராக்கியில்லை. காளியைக் கண்டு பெண்கள் பேசுவதில்லை. பிச்சாண்டியும் முருகனும் ஊராரால் சாதியை