பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சாதித் தடை

என்ன ைபத் தி ய ம் ம தி ரி ப் பேசுகிறீர்களே? என்னோடு இவ்வளவு நாள் பழகியும் என் சுபாவம் தெரிய வில்லையே சாமி மேல் ஆணையாக நான் ஒரு வாரத்தில் வந்து விடுவேன். ’’ இப்படிச் சொல்லும் போது அ வ ன் கண்களில் துணிவும் வீரமும் விளங்கின. -

தம்பி, ஆணையிடாதே தம்பி! உன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. உன்னைப் பிரிவதற்கு மனசு கேட்க வில்லையே!

நீங்கள் நான் சொல்லுவதை ந ம் புங் க ள். நம் எல்லோருக்கும் செளக்கியம் உ ண் டா க வேணுமென் றிருந்தால் எனக்கு உத்தரவு கொடுங்கள்.'

அதற்கு மேல் என்ன சொல்வது! தம்பி புறப்பட்டு விட்டான்! -

“ငါိ డి ဝါဒီ ஒரு வாரம் நூறு யுகம் போல் இருந்தது. எல்லோரும் ஜீவப் பிரேதங்கள் ஆகி விட்டார்கள். சு.ாளி யந்திரத்தைப் போல மாறிவிட்டாள். அ வ ள் கண்களில் ஒளி இல்லை; முகத்தில் சோபை இல்லை.

வழியிலே போகிறவனை நம்பி உறவினர்களைக் கை விட்டால் தெய்வம் அப்படித்தான் தண்டிக்கும்' என்று சில பாவிகள் நாக்கில் நரம்பில்லாமல் சொன்னார்கள்.

எட்டாவது நாள் வந்து விட்டான்! நிஜமா ? ஆம்! உண்மை, முக்காலும் உ ண் ைம! செல்லத்தம்பி வந்து விட்டான்! அவன் மட்டுமா ? அவனோடு வேறு இரண்டு பேர், வண்டிகள் தம்பி வந்தாயா ?' என்று ஓடி வந்து கட்டிக்கொண்டான் பி ச் ச | ண் டி. துக்கம் நெஞ்சை அடைத்தது. பேச முடியவில்லை. அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்ட காட்சி எந்தக் கல் மனத்தையும் கரைத்து விடும். 'காளி எப்படி இருக்கிறாள்?' என்று முதலிற் கேட்டான். அவள் ஒரு மூலையில் வி ம் மி வி ம் மி அழுங்குரல் அவன் காதிற் பட்டது; அது அவன் கண்களிலும் நீர்த் துளிகளை உண்டாக்கிற்று; அவன் வேறு புறமாகத் திரும்பிக் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.