பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலின் பெருமை

அதைப்போலவே இறைவன் எல்லோருக்கும் கருணை காட்ட வேண்டுமென்றே விரும்புகிறான். அவன் காட்டுகின்ற ஒரு கருணை மென்மையாகத் தோன்றுகிறது. மற்றொன்று கடுமையாகத் தோன்றுகிறது. மென்மையாகத் தோன்றுவது அறக் கருணை, கடுமையாகத் தோன்றுவது மறக்கருணை; முருகன் சூரபன்மனிடம் மறக் கருணை காட்டி ஆட்கொண்டான்.

மூன்று இயல்

தேவேந்திரன் தேவலோகத்தை ஆட்சி செலுத்தமுடியாமல் செய்து, அவன் பதவியையும் பற்றிக் கொண்டான் சூரன். எல்லாத் தேவர்களையும் அவரவர்களுடைய தொழிலைச் செய்ய முடியாமல் சிறையில் அடைத்துவிட்டான். அதனால் சிருஷ்டி இல்லை; ஸ்திதி இல்லை; சங்காரம் இல்லை. தேவர்களுக்குச் சாப்பாடு இல்லை; அதனால் ஊட்டம் இல்லை. இறைவன் என்ன என்ன கடமையைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்று வைத்தானோ அவற்றைச் செய்ய முடியாமல் அவர்களைச் சிறையிட்டான் சூரன். தான் செய்ய வேண்டிய கடமையையும் செய்யவில்லை. அவனை முருகன் வதம் செய்து, மறக் கருணை காட்டி ஆட்கொண்டான்; தேவர்கள் தங்கள் தங்கள் கடமையை மறுபடியும் எவ்வித இடையூறும் இன்றிச் செய்யும்படியாகச் செய்தான். இது புராணம்.

கந்தபுராணத்தை மூன்று நிலையில் பார்க்கலாம். ஒன்று கதையியல். சூரபத்மன் வதையைக் கூறுவது கதை. இரண்டாவது உலகியல்; மூன்றாவது அருளியல்.

ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாததோடு பிறர் செய்கின்ற நல்ல காரியங்களையும் செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தால் அவன் அசுரன்தான். அவனைத் தண்டித்து நல்லவர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்படியாக உதவுபவன் முருகன். இது உலக இயலை ஒட்டிய தத்துவம்.

உள்ளமாகிய பீடத்தில் தேவர்களுடைய சம்பத்து ஆகிய நல்ல குணங்கள் தங்கள் கடமைகளைச் செய்யவொட்டாமல், அந்தப் பீடத்திலே அசுரர்களுடைய சம்பத்து ஆகிய காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் வந்து ஆக்கிரமித்துக்

117