பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

களைச் செய்கிறவர்களிடம் கோபம் கொள்ளுவது இல்லை. ஆனால் அவர்களுக்கு அந்த அந்தக் காரியங்களுக்கு ஏற்ற தண்டனையை அளிக்கிறான்; திருந்த வேண்டும் என்ற எண்ணத்தால் தண்டிக்கிறான்.

"இராவணன் என் மனைவியை எடுத்துப் போய்விட்டான்; அவனை விட்டேனா பார் என்ற கோபம் இராமனுக்கு வந்திருந்தால், போர்க்களத்திலே படைகள் எல்லாம் அழிந்து போக, தன்னுடைய துணைவர்கள் யாவரும் மாண்டு போக நிராயுதபாணியாக நின்ற இராவணனை இதுதான் சமயம் என்று ஒரே அம்பால் கொன்றிருக்கமாட்டானா? அவனுக்கு இராவணனிடம் அப்போது கருணைதான் உண்டாயிற்று. பத்துத் தலையையுடைய இராவணன் தன்னைச் சுற்றிலும் யாரேனும் துணைவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்கலாம். எல்லோரும் செத்துக் கிடக்கும்போது, படைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் போது, தன் கையிலுள்ள எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல் தனியே நிற்கும்போது, 'இனி இராமனுடன் நான் எப்படிச் சண்டை போட முடியும்? அவன் மனைவியை அவனோடு அனுப்பிவிடலாம்' என்று எண்ணினானா? இல்லை. இராமன் நிராயுதபாணியாக இருந்த இராவணனை ஒரே அடியாக அப்போது அடித்துக் கொன்று விட்டானா? இல்லை. "இன்று போய் நாளை வா" என்றான். அந்தச் சமயத்தில் அவன் காட்டிய வீரம் கருணை வீரம். நிராயுதபாணியிடம் படையைச் செலுத்தாமல் இருப்பதைத் தழிஞ்சி என்று சொல்வார்கள் இலக்கணப் புலவர்கள்.

"ஆள யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை, இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாஎன நவின்றனன், நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"

என்பது அவர் பாட்டு.

இராவணனிடம் போர் செய்வதற்கு என்ன இருக்கிறது? அவனுடைய துணைவர்கள் எல்லோரும், படைகள் எல்லாம், புயற் காற்றில் அடிபட்ட பூளைப் பூவைப் போலப் போய் விட்டன. அந்தச் சமயத்தில், "இன்று போய் நாளை வா" என்கிறான் கருணை வள்ளலாகிய இராமன். "இன்றைக்குப் போ.

157