பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

யிருக்கிறது. ஆனால் இந்திரியங்களை நிக்கிரகம் செய்தவர்கள், இந்திரியங்களைத் தங்களுக்கு அடங்கினவையாகச் செய்தவர்கள், அவற்றால் துன்பத்தை அடையாதவர்கள், அவற்றை எதற்குச் செய்ய வேண்டும்? புழுக்கமான இடத்திலே இருப்பவன் கையிலே விசிறி வைத்திருப்பான். நன்றாகக் காற்று வீசுகிற கடற்கரையில் உட்கார்ந்திருப்பவன் கையில் விசிறி எதற்காக வைத்திருக்க வேண்டும்? "பொறிகளின் குறும்புகளை அடக்கி உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குச் சாதனங்கள், கருவிகள் எதற்கு?" என்ற கருத்தையே,

'மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத்
'தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!
'தேங்காய்ப்பால் ஏதுக்கடி?”

என்று சித்தர் மொழியில் சொன்னார் குதம்பைச் சித்தர்.

உள் உருக்கும் தேன்

ருணகிரிநாதரும் தாம் பெற்ற இன்பத்தை ஆனந்தத் தேன் என்று உருவகமாகச் சொல்கிறார். சுகத்திற்கும், துக்கத்திற்கும் அப்பாற்பட்ட இன்பமே ஆனந்தம். அதனைத் தேன் என்று சொன்னார்; அப்படிச் சொன்னால்தான் நமக்கு விளங்கும். அந்தத் தேனைப் பற்றிப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

'தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
'நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
'அனைத்தெலும்பு உண்ணெக ஆனந்தத் தேன் சொரியும்
'குனிப்புடை யானுக்கே சென்றுதாய் கோத்தும்பீ"

என்று மாணிக்க வாசகர் பாடுகிறார்.

தேனை உண்ணுவது வண்டு. இரண்டுவிதமான தேன் உண்டு. நுனி நாக்கில் மட்டும் இனிக்கும் தேன் ஒன்று; உள்ளத்திலும், உயிரிலும் இனிக்கும் தேன் ஒன்று. நுனி நாக்குக்கு மாத்திரம் இனிக்கும் தேனைச் சுவைத்துப் போகிறது வண்டு. மாணிக்கவாசகர் சொல்கின்ற தேனோ நாக்கை மாத்திரம் இனிக்க வைக்கவில்லை. இது ஆனந்தத்தேன். உடம்பில் மிக மிக மென்மையானது நாக்கு. சாதாரணத் தேன் இந்த நாக்கை இனிக்க வைக்கிறது. அவர் சொல்கிற ஆனந்தத் தேன் உடம்புக்குள் மிக மிக வலிதான

257