பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளிகோன் உபதேசம்

தீ அன்று

ருக்கின்ற மாசுகளைக் களைவதே இன்பம் என்று சொல்வார்கள். நீரினாலே ஓரளவு மாசுகளைக் களைய முடியும். தீயோ பொருள்களின் மாசுகளைப் போக்கிப் பரிசுத்தத்தைப் தருகின்றவற்றில் சிறந்தது. அந்த அக்கினியை உபமானமாகச் சொல்லலாமா? அதையும் சொல்லக் கூடாது. "தீ அன்று."

நீர் அன்று

ப்படியானால், அப்புவை அமிருதம் என்று சொல்கிறார்கள். உண்பாருக்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கிறவர்களுக்குத் தானும் உணவானது நீர்.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"

என்கிறார் வள்ளுவர். நெல்லை விளைப்பதற்குத் தண்ணீர் வேண்டியிருக்கிறது. நெல்லிலிருந்து அரிசியைக் குத்தி எடுத்தால் அதைச் சோறு ஆக்கத் தண்ணீர் வேண்டும். சாப்பிட நாம் உட்கார்ந்தவுடன் தாய் ஒரு பாத்திரத்தில் நீரைப் பக்கத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாதம் போடுகிறாள். சாப்பிடுகிறவனுடைய உணவுப் பொருளையும் தண்ணீர் உண்டாக்கிக் கொடுக்கிறதோடு சாப்பிடுகிறவனுக்குத் தானேயும் தனித்து உணவாகிறது. ஆகையால் மிகச் சிறப்பானது தண்ணிர் என்று அநுபவத்தில் காண்கிறோம்.

சில காலத்திற்கு முன்னால் மேல்நாட்டிலிருந்து பெரிய விஞ்ஞானி ஒருவர் வந்தார். ஸர்.ஸி.வி. ராமன் அவரிடம் திடீரென்று, "நீங்கள் அமிருதத்தைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர் சற்றே யோசனை செய்தார். "ஸ்ரீ ராமன் சுத்தமான தண்ணீர் (Pure and Simple water) என்றார். ஆகவே, நீங்கள் அடைந்த அநுபவம் தண்ணீர் போன்றதா?" என்று கேட்டால் "நீர் அன்று" என்கிறார்.

மண் அன்று

ரி. உயிர்கள் உடம்பு எடுத்துப் பக்குவத்தை அடைகின்றன. உடம்புக்கு ஆதாரமாக இருப்பது பூமி. தரை என்று அதற்குப்

285