பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

வதைத் 'தாரணை' என்று சொல்வார்கள். வெளியில் காணும் மூர்த்தியை நமது உள்ளத்திலே காணப் பழக வேண்டும். முன்பு தம் உள்ளத்திலே கண்டு பழகியவர்கள்தாம் கடவுளுக்குப் புறத்தே திருவுருவம் அமைத்திருக்கிறார்கள்.

பொறியை வசமாக்குதல்

டவுளுக்கு அலங்காரம் பண்ணுவதே நம் கண்கள் அந்தத் திருவுருவத்திலே கவிய வேண்டும் என்பதற்காகத்தான். அழகாக அலங்காரம் பண்ணாமல் பார்த்தால் அந்தத் திருவுருவத்தில் நமது மனமும் கண்களும் கவிவது இல்லை.

நம் வயிற்றுக்குள் போகின்றது ஜிலேபி, அந்த ஜிலேபிக்கு நல்ல நிறத்தை ஊட்டிப் பண்ணுகிறார்கள். வயிற்றுக்குள் போவதுதானே என்று ஒரே உருண்டையாக உருட்டி வைத்தால் நமக்கு அதனைத் தின்பதற்குத் தோன்றுகிறதா? அதனை வாங்கித் தின்னும்போது அது சுவைக்கிறது. வாங்குவதற்கு முன்னால் அதனை வாங்கித் தின்ன வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்குவன அதன் நிறம் வடிவு முதலியவை. அவற்றைக் கண்ணுக்கு அழகாகப் பலவிதமான வர்ணங்களை ஊட்டி வைக்கிறார்கள். அதோடு காதுக்கு இன்பம் அளிக்க ரேடியோ வைத்திருக்கிறார்கள். உடம்புக்கு இன்பம் அளிக்க விசிறிக் காற்று இருக்கிறது. நல்ல மேஜை போட்டிருக்கிறார்கள். நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட பிறகு ஜிலேபியை நாக்குக்கு இனிமையாக அளிக்கிறார்கள். ஹோட்டல்காரர்களுக்குத் தெரியும் இந்த விளம்பர யுக்திகூட நம் பெரியோர்களுக்குத் தெரியாதா?

கடவுளுக்கு உருவம் அமைத்ததுகூடப் போதாது எனக் கருதி, அந்த உருவத்துக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்தார்கள். நாசிக்கு இனிமையான பல நறுமணப் புகைகளை எழுப்பினார்கள். காதுக்கு இனிமையான சங்கீதம் வைத்தார்கள். உடம்புக்கு இனிமையான பூங்காற்றைக் கொடுக்க அழகான நந்தவனங்களை ஏற்படுத்தினார்கள். நாவுக்கு இனிக்கும் பிரசாதங்களை வழங்கச் செய்தார்கள்.

உடம்பிலுள்ள இந்திரியங்களின் மூலமாகப் பலவிதமான இன்பங்களை அநுபவிக்க மனிதர்கள் விரும்புவதால் ஆலயங்க

27