பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்குஎன்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ங்ன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. "அந்தப் பயணத்திற்கு நம் கையில் வைத்திருக்கும் பணம் உதவாது. அந்த உலகத்தில் செலாவணி ஆகக் கூடிய பணம் ஒன்று சொல்கிறேன். உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தப் பாங்கில் கொடுத்து, அந்தப் பணமாக மாற்ற வேண்டும் தெரியுமா? பணம் இல்லாத வறியவராகிய பாங்கில் போட்டு மாற்ற வேண்டும்' என்கிறார். நேர் மாறு உலகியலும் அருளியலும் சில சமயங்களில் நேர்மாறாகத் தோன்றும். மிக்க ஆடம்பரமாக உடையணிந்து கொண்டிருக்கும் பெரிய பணக்காரனை உலகியலில் ம்திக்கிறார்கள். அவன் ஞானியாக மாட்டான். வீதியில் ஒடு ஏந்திக் கோவணம் கட்டிக் கொண்டு போகும் சிலரை ஞானிகள் என்கிறோம். அருளியலில் அவர் களுக்குத்தான் மதிப்புண்டு. இறைவனே கபாலியாகத் தோற்றம் அளிக்கிறான். நம்மிடம் இருக்கும் பணத்தை நாம் பணம் நிறைய இருக்கும் பாங்கில் போடுகிறோம். உலகத்துச் செல்வ நிலை இது. ஆனால் வறிஞர்களாகிய பாங்கில் போடச் சொல்கிறார் அருணகிரியார். இது தலைகீழ்ப் பாடமாகத் தோன்றுகிறது. போன பாட்டிலே, நம்மிடத்தில் இருக்கும் ஞானமாகிய செல்வத்தைப் பிறர் களவாடிக் கொண்டு போகாமல் இருக்க நமக்கு வேதாகம சித்திர வேலாயுதன் துணையாக வருவான் என்று சொன்னார். நாம் செல்கின்ற இடத்தில் செலாவணி ஆகும் பொருளை நம்மிடம் வைத்திருந்தால் வழியில் நமக்குத் துணையாக வரு கிறவனும் அவனே. - இவ்வுலகில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை எப்படி மாற்ற வேண்டும்? - - 89