பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நடைமுறைக்கு ஏற்ற உபதேசம் "நான் எப்படிக் கொடுக்க முடியும்? எனக்கு என்ன சக்தி இருக்கிறது?" என்று சிலருக்குச் சந்தேகம் வரும். சிலர் பிச்சைக் காரர்கள் தம் வீட்டுக்கு வந்தால், "என்னிடம் பிச்சை கேட்க வந்தாயா? நீ வெளியில் வந்துவிட்ட பிச்சைக்காரன்; நான் உள்ளே இருக்கிற பிச்சைக்காரன்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 'நமக்கு இருந்தால்தானே பிறருக்குக் கொடுக்க முடியும்?' என்று கேட்பவர் பலர். அருணகிரியார் இது தெரிந்து சொல்கிறார்: வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்குஎன்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள் 'நீ இரண்டு வேளை சாப்பிடுகிறாய் அல்லவா?” 'இல்லை; ஒரு வேளைதான் சாப்பிடுகிறேன்." "சரி, அந்த ஒரு வேளையாவது அரிசிச் சோறு சாப்பிடுகிறாய் அல்லவா?" 'இல்லையே! அந்த ஒரு வேளையும் கஞ்சிதானே சாப்பிடுகிறேன்?" "சரி, நீ கஞ்சிக்கு நொய் போடுகிறாய் அல்லவா? அந்த நொய்யிலும் உடைந்த நொய் இருக்கிறது. நீ நொய்யைச் சாப்பிடு, நொய்யிலும் உடைந்த குறுநொய் இருக்கிறதே, அதையாவது பிறருக்குக் கொடுக்கலாமே" என்கிறார். ஒர் அரிசியில் உடைந்தது நொய். அதில் குறைந்தது குறு நொய். அதைக் குறுணை என்று இப்பொழுது சொல்கிறோம். பெரிய விருந்தாக வைத்தால்தான் தர்மம் என்று ஆகாது. நீ விருந்து போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சோறு சாப்பிட்டால் அதில் ஒரு பகுதியைத் தர்மமாகக் கொடுக்கலாம். அரிசியாகவே கொடுக்க வேண்டுமென்பதில்லை. நொய்கூடக் கொடுக்க முடியாது என்றால் அதிலும் உடைந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கக் கூடாதா?’ என்கிறார். 94