பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ? இன்றோ ரிடையூ றெனக்குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய், பிழைசெய்வாய்; நானே இதற்கு நாயகனே?" என்று மணிவாசகர் சொல்கிறார். ஒரு கல்லை எடுத்து ஆற்றில் போட்டால் அது ஆற்றுக்குள் அமிழ்ந்துவிடுகிறது. ஆனால் ஒரு தெப்பக்கட்டையைப் போட்டு அதில் எவ்வளவு பெரிய கல்லை ஏற்றினாலும் தண்ணீரின் மேலே மிதக்கிறது. 'நான் இருக்கிறேன்; எல்லாம் என்னுடையது” என்றால் தண்ணிருக்குள் மூழ்கிப் போக வேண்டியதுதான். 'என் னுடையது அன்று. எல்லாம் இறைவனுடையவை. இறைவன் சார்பிலே இருக்கிறேன்' என்று நினைக்கிறவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. மிதக்கிற பொருளுக்கு ஆழத்தைப் பற்றி கவலை இல்லை. ஆழ்கின்ற பொருளுக்குத்தான் ஆழத்தைப் பற்றிக் கவலை. "ஓர் அடி ஆழமாக இருந்தால் தப்பலாமே! ஒன்பது அடி ஆழமாக இருந்தால் செத்துப் போவோமே" எனத் தண்ணிருக்குள் தனித்து வீழ்ந்தவன் கவலைப்படுவான். தெப்பக் கட்டையோடு புகுந்தவனுக்கு ஆழ்த்தைப் பற்றி என்ன பயம்? துன்பமும் இன்பமும் உலகத்தில் துன்பங்களுக்கு நடுவில் வாழ்கிற மனிதனுக்கு இறைவன் திருவருள் தெப்பமாக இருந்தால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் கலங்கமாட்டான். துன்பங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் மாறிவிடவில்லை. அருளைத் தெப்பமாகப் பெற்றவனும் வேறிடம் போவதில்லை. எந்த ஊரில் எந்த மக்களுக்கு இடையே வசித்து வந்தானோ அதே ஊரில், அதே மக்களுக்கிடையேதான் அவன் வசித்து வருவான். ஆற்றுக்குள் எத்தனை மேடுபள்ளம் இருந்தாலும் கல், முள் இருந்தாலும் ஆற்றின்மேல் தெப்பத்தில் மிதக்கிறவனுக்கு அவற்றைப் பற்றி என்ன கவலை? அவன் ஆற்றின் மேலேதான் இருக்கிறான்? 9了