பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எண்ணி, அவன் கொடுத்திருக்கும் பொருளை ஒளிக்காமல் அவனிடமே கொடுக்க வேண்டும். கடவுள் வந்தும் டால்ஸ்டாய் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஓர் ஊரில் ஒரு சக்கிலியன். அவனுக்கு ஆண்டவனைக் கண்ணால் பார்க்க வேண்டு மென்று ஆசை. பல காலம் அவனது தரிசனத்திற்காகக் காத்துக் கிடந்தான். ஒருநாள் அவன் கனவில், 'வெள்ளிக்கிழமையன்று நான் வருவன்ே என்று ஆண்டவன் சொல்லி மறைந்தான். வெள்ளிக்கிழமை அன்று வழக்கமாகத் தான் செய்யும் வேலை களை எல்லாம் கட்டி வைத்துவிட்டு ஆண்டவனது வருகைக்காக அந்தச் சக்கிலியன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கிழவர் வந்தார். 'அப்பா, நான் பத்து மைல் தூரம் நடந்து போக வேண்டும். என் செருப்பு அறுந்துவிட்டது. கொஞ்சம் இதைத் தைத்துக் கொடு' எனக் கேட்டார். 'அதெல்லாம் இன்றைக்கு முடியாது; போ போ' எனச் சொல்லி விட்டான் அவன். மணி ஏறிக் கொண்டே போயிற்று. இறைவனைக் காணவில்லை. ஒரு சின்னக் குழந்தை குடு குடுவென ஓடி வந்து மழலைச் சொல்லில், "நான் விளையாடப் போக வேண்டும். இந்தச் செருப்பைக் கொஞ்சம் தைத்துக் கொடு' என்றது. அவன், 'இன்று ஒரு வேலையும் செய்ய முடியாது போ' எனச் சொல்லி விரட்டிவிட்டான். ஆண்டவன் வருகைக்காக அல்லவா அவன் காத்துக் கொண்டிருக்கிறான்? ஆண்டவன் வரவில்லையே என்ற ஏமாற்றத்தோடு இருந்த அவனிடம் மறுபடியும் ஒரு கிழவி வந்தாள். 'அப்பா, தண்ணீர் வைக்கும் இந்தத் தோல் பை கிழிந்துவிட்டது. இதைத் தைத்துக் கொடு' என்று கேட்டாள். அவன் கோபத்தோடு, 'இன்று ஆண்டவன் வரும் நாள். ஒன்றும் செய்ய முடியாது போ' என்று சொல்லிவிட்டான். இரவு மணி பத்தாகிவிட்டது. இறைவன் சொன்னபடி வரவில்லை. சச்கிலியன்துக்கத்தோடு, 'ஆண்டவனே, நீ இன்றைக்கு வருவதாகச் சொன்னாயே! வரவில்லையே!” என்று நைந்து வருந்தியபடியே படுத்தான். கனவில் இறைவன், 'அப்பா, நான் மூன்று தடவை வந்தேன். ஏழைக் கிழவனாக வந்தேன். குழந்தையாக வந்தேன். கிழவியாக வந்தேன். நீதானே ສ.ສ.ສ. போ போ என்று மூன்று தடவையும் விரட்டினாய்?" என்றானாம். அப்பொழுதுதான் அவனுக்கு ஞானம் பிறந்தது. . 1 QC