பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இறுகிய பொன்னாக நின்ற கிரெளஞ்சத்தில் ஊடுருவிச் சென்று முருகனுடைய வேல் தொளைத்தது. வேல் தொளைத்தது என்று கூறினாலும், அந்தச் செயலுக்குரிய வீரம் முருகனிடம் இருப்பதுதான். அவன் வேலை ஏவினான். அது தொளைத்தது. IDssoël) வீரம் படைத்த வேலாயுதத்தையுடைய மன்னனாக முருகனைப் பரவிய அருணகிரியார், அடுத்தபடி அவனது மாலையைச் சொல் கிறார். அவன் வெட்சி, காந்தள், கடம்பு முதலிய மாலைகளை அணிபவன். கடம்பு அவன் திருமார்பில் அணியும் மாலை. குறிஞ்சி நிலத்திலே மலரும் மலர் கடம்பு. அம்மலர் சக்கரத்தைப் போல உருளும்; மாலை தொடுத்தாற் போல அதன் கொத்து இருக்கும். முருகன் அலங்காரம் செய்து கொண்டு தன் தேவி மாரோடு உல்லாசமாக இருக்கும்போது அணிகிற மாலை அது. "அலங்கலென வெண்கடம்பு புனைந்துபுண ருங்குறிஞ்சி அணங்கைமணம் முன்புணர்ந்த - பெருமாளே' என்று திருப்புகழில் வருகிறது. கடம்பு மாலையை அணிந்து வள்ளியெம்பெருமாட்டியோடு இன்புற்றானாம் முருகன். வீரத்துக்கும் காதலுக்கும் நாயகனாக வைவேல் மன்னனாகவும் கடம்பணியும் மார்பனாகவும் இருக்கும் முருகனை ஏத்துகிறார் அருணகிரியார். சொன்ன க்ரவுஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன! கடம்பின் மலர்மாலை மார்ப! 2 அநுபவ நிலைகள் அருணகிரியார் முருகனுடைய திருவருளில் திளைத்து இன்ப அநுபவம் பெற்றவர். இறைவனை வழிபட்டு அன்பு முறுக 106