பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 "பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கநின்று கேட்டாலும் பரிந்துளுணர்ந் தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டிஅணைத் தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்தசுவைக் கரும்பே' என்று இராமலிங்க சுவாமிகள் பாடுகிறார். அது ஒர் அநுபவம். முயற்சியும் பலனும் உண்மையாக முயற்சி செய்பவனுக்குக் கைமேல் பலன் உண்டு. வேளாண்மை செய்கிறவனுக்கு நிலமும் கருவியும் உரமும் உழைப்பும் தக்கபடி அமைந்தால், அவன் நாளுக்கு நாள் தன் உழைப்புக்குப் பலன் உண்டாகி வருவதைக் கண்முன் காண்பான். இறைவனுடைய அருளுக்காக ஏங்கி நின்று அன்பு செய்யும் அன்பர்களுக்கும் நாளுக்கு நாள் அநுபவத்தில் வளர்ச்சி தெரியும். "நான் செய்கிற பக்தி சரிதானா?" என்று பிறரைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சோறு வயிற்றில் போகப் போகப் பசி அடங்கி வருவதை உண்டவன்தானே அறிகிறான்? அவன் வேறு ஒருவனிடம் போய், 'எனக்குப் பசி தீர்ந்துவிட்டதா?’ என்று கேட்பதில்லை. - இறைவன் அருளுக்காக முயலும் அன்பு நெறியில் கிடைக்கும் அநுபவம் அவரவர்களுக்குத் தெரியும். அந்த அநுபவம் முதிர்ந்து வருவதும் அவர்களுக்குத் தெரியும். முயற்சி செய்யாதவர்களுக்கு, சாதனத்திலே ஊக்கம் இல்லாதவர்களுக்கு, அநுபவம் பெற்றவர் கள் ஏதேனும் சொன்னால் கதையாகத் தோன்றும்; கற்பனை யாகத் தோன்றும்; நம்பிக்கை பிறக்காது. ஆனால் ஓரளவு முயற்சி செய்து அதனால் விளைந்த அநுபவத்தைப் பெற்றவர்களுக்கோ, அநுபூதிமான்களின் வாக்குக் கேட்கும்போது, "ஐயோ! இந்த அதுபவத்தை நாம் இன்னும் பெறவில்லையே!” என ஏக்கம் உண்டாகும். தாம் செய்த முயற்சியின் அளவுக்கு ஒருவகை அநுபவம் பெற்றவர்களாதலின், பெரியவர்கள் கூறும் அநுபவங்கள் உண்மையானவையே என்று தோன்றும். தாம் பெற்ற சிறிய அநுபவம் ஒரு காலத்தில் பொய்யாக அவர்களுக்குத் தோன்றி யிருக்கும். ஆனால் இப்போது அது மெய் என்று தெளிந்திருக் கிறார்கள். இது முயற்சியின் பயனாக விளைந்தபோது எப்படி 108