பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை மெய்யாகத் தோன்றுகிறதோ, அப்படியே இன்னும் முறுகிய முயற்சியினால் பெரியவர்கள் பெற்ற மேலான அநுபவமும் மெய்யாகத் தோன்றும் என்ற அறிவு அவர்களுக்கு உண்டாகும். அருணகிரிநாதர் பெற்ற அநுபவ வகைகளில் ஒன்றை இப்போது சொல்கிறார். அதை அருளிய வைவேல் மன்னனை, கடம்ப மலர்மாலையணிந்த மார்பனைப் பார்த்துச் சொல்கிறார். அந்த அநுபவம் அவருக்கு வியப்பை மூட்டுகின்றது. அது என்ன அநுபவம்? உடம்பு இறந்தது இந்த உடம்பு இறந்துபோய்விட்டதாம். இறந்தே விட்டது இவ்வுடம்பே. உடம்பு இறந்துபோனால் இந்தப் பாட்டை எப்படிப் பாடினார்? உயிர் உடம்பினின்றும் போய்விட்டால் இறந்துவிட்டான் என்று சொல்கிறோம். இறத்தல் என்ற சொல்லுக்கு விட்டு நீங்குதல் என்பதுதான் பொருள். உடம்பிலிருந்து உயிர்விட்டு நீங்குவதால், உயிர் இறந்துவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தம். 'முத்தப்பன் இறந்துவிட்டான்' என்று சொல்கிறோம். முத்தப்பன் என்ற பெயராலே குறிக்கப்பட்ட உடம்பு எங்கும் போகவில்லை. உயிர்தான் போயிற்று. அந்த உடம்பு உயிரோடு இருந்தபோது முத்தப்பன் என்று அடையாளம் சொல்லுகிறோம். அவன், அவர் என்று சுட்டும் பொருள் உயிர்தான். "அவர் போய் விட்டார்: என்னும்போது போனது உயிர்தானே? ஆகவே உயிர்தான் இறந்ததேயன்றி உடல் இறக்கவில்லை. உயிர் இறந்ததனால், உடம்பு பிணமாயிற்று என்று வேண்டுமானால் சொல்லலாம், உடம்பு இருக்க உயிர் போகிற நிலை அது. அருணகிரிநாதர் அதைச் சொல்லவில்லை. உயிர் இருக்கும் போது உடம்பு இறந்துவிட்டதாம்! இது வேடிக்கையாக இருக்கிற தல்லவா? உடம்பு இறந்துவிட்டது என்று கூறுவதற்கு என்ன பொருள் என்று சிந்திக்க வேண்டும். உயிர் இறந்த பிறகு உடம்பு இருந்தாலும் அதில் உணர்ச்சி இருப்பதில்லை. அதை வெட்டி 3.09