பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 னாலும் குத்தினாலும் துடிப்பதில்லை. கொசுக் கடித்தால் உடனே துள்ளுகிறோம். புண் வந்தால் துடியாய்த் துடிக்கிறோம். இதே உடம்பு உயிர் இறந்தபிறகு என்ன பண்ணினாலும் உணர்ச்சி யின்றிக் கட்டையாகி விடுகிறது. உயிர்போன உடம்புக்கும் உயிர் போகாத உடம்புக்கும் இந்த வேற்றுமை இருக்கிறது. உயிர் போனபிறகு வர வேண்டிய நிலை உயிர் இருக்கும்போது உடம்புக்கு வந்துவிட்டதாம். அதைத்தான், "இறந்தே விட்டது இவ்வுடம்பே' என்று அருணைமா முனிவர் சொல்கிறார். உணர்ச்சி மரத்தல் "அப்படி உணர்ச்சி இல்லாமல் உயிருள்ள உடம்பு இருக்குமா?" என்று கேட்கலாம். ஒருவன் அயர்ந்து தூங்குகிறன். 'உடம்பு மறந்து தூங்குகிறான்' என்று சொல்கிறோம். மூட்டைப் பூச்சி கடிக்கிறது. அது அவனுக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவன் உடம்பிலே உணர்ச்சி இருப்பதில்லை. அந்தப் பூச்சி அழுத்தமாகக் கடித்தால் சற்றே புரண்டு கொடுக்கிறான். மயக்கம் போட்டு விழுந்தவனைப் பாருங்கள். அவன் மண்டை யில் காயம் பட்டு ரத்தம் ஒழுகுகிறது. ஆனாலும் அவனுக்கு உணர்ச்சி இருப்பதில்லை. அவன் உடம்பிலே உயிர் இருந்தாலும் உணர்ச்சியற்றுப் போகிறது. ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்கிறார்கள். உணர்ச்சி மரத்துப் போக ஊசி குத்திச் சஸ்திர சிகிச்சை செய்கிறார்கள். கத்தியினால் அறுத்து மருந்து போட்டுப் பின்பு தைக்கிறார்கள். அப்போதெல் லாம் அவன் உடம்பில் உணர்ச்சியே இருப்பதில்லை. உயிர் உடம்பில் இருக்கும்போதே உணர்ச்சி அற்றுப் போகும் நிலை வருவது அநுபவபூர்வமானதுதான் என்று இவற்றால் தெரிகிற தல்லவா? தூக்கத்தால் ஒரளவு உணர்ச்சி மரக்கிறது; மயக்கத்தாலும் மரக்கிறது; மருந்தினால் உணர்ச்சி மரத்துப் போகிறது. அப்படியே ஒருவகை நிலையில் யோகியர்களுக்கு உடம்பு உணர்ச்சியற்றுப் போகிறது. உடம்பு இருந்தும் இறந்துவிட்டது போல ஆகிவிடு கிறது. அந்த நிலையில் பெற்ற அநுபவத்தையே, i 10