பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நின்னை உணர்ந்து உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு. அப்போது நான் பெற்ற அநுபவம் வேறு, நான் வேறு என்ற உணர்வு இல்லை. நீ வேறு, நான் வேறு என்ற உணர்வும் இல்லை. நானே அங்கு இல்லை. என்னையே மறந்திருந்தேன்." எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு என்னை மறந்திருந்தேன் தன்னையே மறந்த நிர்க்குண நிலையில், உணர்வின் இயக்க மும் ஒழிந்து ஒருங்கிய நிலையில், உடம்பு இறந்துவிட்டதாம். உடம்பை இயக்கும் உயிரே உணர்வற்று நிற்கும்போது உடம் புணர்வு எங்கே எழப்போகிறது? உள்ளே போட்ட சட்டையோடு கழற்றும்போது வெளிச்சட்டை யும் கழலுவதுபோல, தன்னையே மறந்த நிர்க்குண நிலையில் உடம்பும் மறந்துபோவது இயல்புதானே? முருகனுடைய தியானத்தினால் இந்த அநுபவம் விளைந்த தென்று அருணகிரிப் பெருமான் சொல்கிறார். என்னை மறந்திருந்தேன், இறந் தேவிட்டது இவ்வுடம்பே. முருகனுடைய வீர வேலையும் கடம்பமாலையையும் நினைத்துத் தியானம் பண்ணத் தொடங்கினால் நாளடைவில் நினைப்பிலே ஒருமை உண்டாகும்; பிறகு உணர்வு தலைப்படும்; அப்பால் உணர்வில் ஒருமைப்பாடு வரும்; எல்லாம் ஒருங்கிய ஒருமைப்பாட்டிலே குணங்குறி கடந்த நிர்க்குண அநுபவம் நிகழும்; அப்போது கருவி கரணம் கழன்று, தன்னை மறந்து, தன் உடம்பை மறந்து நிற்கும் இன்பம் ஏற்படும். சொன்ன க்ரவுஞ்ச கிரிஊ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன! கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தைஉற்று நின்னை உணர்ந்துஉணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம்பூண்டு என்னை மறந்திருந் தேன்; இறந் தேவிட்டது. இவ்வுடம்பே. 1 1 4