பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் தொடர்ந்து, கோழியைக் கையில் கொடியாக ஏந்திய ஆண்ட வனை நினைக்க வேண்டும். வாழ்வில் ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது முருகனை நினைப்பதற்கு வாய்ப்பாக அல்லவா கோழி கூவுகிறது? நாமோ கோழியின் குரலைக் கேட்டுத் தினமும் எழுந்திருக் கிறோம். ஆனால் அந்தக் குரலையுடைய கோழியையும் நினைப்ப தில்லை; அதைப் பிடித்த ஆண்டவனையும் நினைப்பதில்லை. கோயிலுக்குச் சென்று அங்குள்ள கொடி மரத்தில் இருக்கும் கோழியைப் பார்த்துக் கும்பிடாவிட்டாலும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கோழி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தன்னை நினைப்பூட்டுகிறது; முருகனையும் நினைப்பூட்டு கிறது. எவ்வளவு எளிதில் முருகனுடைய நினைப்பை உண்டாக்கிக் கொள்ளலாம்! கோழிக் கொடியைப் படைத்த கரம் முருகன் திருக்கரம். அந்தக் கோழிக் கொடி முருகனது திருக்கரத்தின் நினைப்பை உண்டாக்கி, அப்பெருமானின் பாதத்தில் புக வேண்டுமென்ற நினைப்பையும் உண்டாக்கிவிடும். முருகனுடைய அன்பர் களுக்குக் கோழியின் குரல் கேட்ட மாத்திரத்தில் அத்தகைய நினைப்பே வரும். - அவன் நினைப்பு இல்லாமல் இந்த உலகத்தில் வாழ முடியுமா? உலகத்தில் வாழ வேண்டுமென்று நினைக்கிற மக்கள், பொழுது விடிந்துவிட்டது என்று தெரியாமல் வாழ முடியுமா? விடிந்தது என்பதற்கு அறிகுறி கோழி. விழித்துக் கொள்பவனுக்குக் கோழி யின் குரல் காதில் விழும். நன்றாக விழித்துக் கொள்பவனுக்குக் கோழிக் கொடியன் அடி மனத்தில் தோன்றும். கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்! அருளா, பொருளா? 'கோழிக் கொடியை உடையவனைப் பணியாமல் இந்த உலகத்தில் வாழ விரும்புகிற புத்தி அற்றவர்களே!' என்று ஆரம் பிக்கிறார் அருணகிரியார். கோழிக் கொடியனைப் பணிவதால் வருவது அருள். வியாபாரம் முதலியவற்றால் வருவது பொருள். க.சொ.11-9 119