பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் நல்வினை நலம் நல்வினை வேறு; வல்வினை வேறு. நல்வினை இருந்தால் என்ன ஆகும்? அவன் பம்பாய் போக விமானத்தில் இடம் பதிவு செய்திருப்பான். அந்தச் சமயம் பார்த்து யாராவது வருவார். அதனால் பயணத்தை ஒத்திப் போட்டு விடுவான். அன்று இரவு அவன் பிரயாணம் செய்ய இருந்த விமானம் போகும்போது நடுவழியில் எரிந்து விழுந்து விட்டது எனப் பத்திரிகையில் மறுநாள் வரும். அவன் அன்று போயிருந்தால் என்ன ஆயிருக்கும்? அவன் நல்வினை அவனுக்கு அரணாக இருந்தது. ஒருவர் ஆயிரக்கணக்கில் செலவழித்துப் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்தார். கல்யாணத்தன்று பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு வைர அட்டிகை போட்டால்தான் கல்யாணம் நடக்கும் என்று சொன்னார்கள். வைர அட்டிகைக்குப் பெண்ணின் தந்தை என்ன செய்வார் பெருந்தொகையைச் செலவழித்துக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். வைர அட்டிகை இல்லாமல் பிள்ளை வீட்டார் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தார்கள். அந்தச் சமயம் பார்த்துச் சம்பந்திகளுக்குச் சந்தனம் கொடுக்கக் கையில் பேலாவுடன் அவர் மருமான் வந்தான். "வாடா பயலே, இங்கே’’ என்று அவனைக் கூப்பிட்டு அவன் மார்பிலே சந்தனம் பூசி, 'நீ உட்காரடா கல்யாணப் பந்தலிலே; என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்' என்று சொல்லி அவனுக்கு மணம் செய்து வைத்தார். அவன் நல்வினை அப்படி வந்தது. நல்வினை நலம் இப்படியெல்லாம் விளையும்; வல்வினை நோய் நேர்மாறாக விளையும். வல்வினையின் விளைவு உடம்பு குண்டாக, வியாதி இல்லாமல் வாழ்கிறவருக்குத் திடீரென்று உயிர் போகிறது. எத்தனை பணம் சேமித்து வைத் திருந்தால் என்ன? அவை அவருக்குப் பயன்படுகின்றனவா? பணம் பணம் என்று அதைச் சேமிக்க அவர் என்ன பாடுபட்டார் வீட்டிற்குள் அவற்றைப் புதைத்து வைத்துப் பூதம் போல யாரும் எடுக்காமல் இருக்க வேண்டுமே என்று காவல் காத்தார். அது அவருக்காவது பயன்பட்டதா? இல்லை. அவர் உயிரைக் கொண்டு போக எந்த வியாதி வந்தது? அதுதான் வல்வினைநோய். 123