பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தலைவிதியாகிய ஊழில் பெரிய வலிமையுடைய பகுதி அது. ஊழிற் பெருவலியாகிய பொல்லாத வல்வினையென்னும் நோய் வாழ்வில் புகுந்து துன்பத்தை உண்டாக்குகிறது. ஊழுக்கு ஏற்பப் போகம் தருகிறவன் ஆண்டவன். அது அவன் சக்தியால் இயங்குகிறது தவிர நம் சக்தியால் அல்ல. இறைவன் அருளாணை நல்வினை, பொல்லாத வினை ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு இயங்குகிறது. மின்சார சக்தியானது பல்பை இடமாகக் கொண்டால் ஒளி வீசுகிறது. 'ரெப்ரிஜிரேட ரோடு சேர்ந்து இயங்கும் போது தண்மை அளிக்கிறது. அது தண்மைதான் அளிக்கும் எனச் சொல்ல முடியுமா? 'ஹீட' ரோடு சேரும்போது வெப்பத்தை அளிக்கிறது. ஆகவே மின்சாரம் வெப்பத்தைத்தான் தரும், தண்மையைத்தான் தரும், ஒளியைத் தான் தரும், ஒலியைத் தான் தரும் எனச் சொல்லமுடியுமா? எல்லாவற்றையும் அது தருகிறது. எதனோடு இணைக்கப் படுகிறதோ அதற்கு ஏற்றபடி விளைவு உண்டாகிறது. இவை எல்லாவற்றையும் அளிக்கும் மின்சார சக்தி ஒன்றுதான். ஆண்டவன் அருளாணையும் அத்தகை யதுதான். பாவமாகிய வல்வினை உள்ளவனுக்கு அவன் அருளா ணையால் துன்பம் விளைகிறது. புண்ணியம் அவனது ஆணை யோடு சேரும்போது இன்பம் விளைகிறது. ஊழின் வகை ஊழ், ஆகூழ் என்றும் இழவூழ் என்றும் இரண்டு பிரிவாக நிற்கிறது. புண்ணியப் பயனால் இன்பத்தைத் தரக் காரணமாக இருப்பது ஆகூழ், நல்ல ஊழ். அது நல்வினை விளைவாகிய நலம். பாவத்தின் பயனாகத் துன்பத்தைத் தருவது இழவூழ். அது பொல்லாத ஊழ். அது வல்வினையின் விளைவாகிய நோய். 'ஊழிற் பெருவலி யாவுள' என்று வள்ளுவர் சொல்கிறார். அருணகிரியாரும், 'ஊழிற் பெருவலி' என்கிறார். நல்வினை நலமும் வல்வினை நோயும் சேர்ந்ததே ஊழ் என்றால், வல்வினை நோயையே பெருவலி என்று சொல்வது ஏன்? அதுதான் பெரும்பான்மையானது. 'ஆண்டவன் நமக்குத் துன்பத்தைக் கொடுக்கிறான். மற்றவருக்கு இன்பத்தைக் கொடுக் கிறான். இப்படிப் பட்சபாதமாக அவன் நடக்கிறானே' என்று சொல்லக்கூடாது. அவனுடைய சக்தி எல்லோருக்கும் பொது 124