பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் பாடுபட்டுத் தேடிப் பணத்தை புதைத்து வைப்பது என்பது அக்காலம். புதைத்து வைக்கும் செல்வந்தான் புதையல். ஒரு பழைய வீட்டை வாங்குகிறோம். அதை இடித்துக் கட்டும் போது புதையல் கிடைக்கிறது. புதையல் கிடைப்பது அதிருஷ்டம் எனச் சிலர் நினைக்கலாம். அது அதிருஷ்டமா? தன் உழைப் பினால் சேமித்த பொருளை ஒருவன் புதைத்து வைத்தான். அந்தப் பொருள் அவனுக்குப் பயன்படவில்லை. உழைப்பினால் சேமித்த பொருள் அவனுக்கே பயன்படவில்லை என்றால், உழைப்பு இல்லாமல் நமக்குக் கிடைக்கும்போது நமக்குத்தானா அது பயன்படப் போகிறது? புதையலைப் பூதம் காக்கும் என்பர். புதைத்த அச்செல்வத்தை பூதம் போலத்தானே அதைப் புதைத்தவன் காத்திருக்கிறான்? அருணகிரிநாதர் இத்தகைய நிகழ்ச்சிகளை அக்காலத்தில் நேரில் பார்த்தவர் ஆகையால் சொல்கிறார். இவ்வுலகத்தில் வாழ்நாளை வீணாக்காமல் வாழ வேண்டும். நல்லதைச் சேமிக்க வேண்டும். இங்கே சேமிப்பவை இரண்டு. ஒன்று அருள். கோழிக் கொடியனுடைய அடியைப் பணிந்தால் அதைச் சேமிக்கலாம். மற்றொன்று ப்ொருள். முருகனை மறந்துவிட்டுப் பொருளைச் சேமித்துப் புதைத்து வைத்தால் அது இந்த உலகத்திலும் உதவாது. ஆதலின் அருளைச் சேமிக்க வேண்டும். அருள் கிடைத்தால் பெற்ற பொருளை நாமும் நுகர்ந்து பிறருக்கும் கொடுத்து வாழும் வகை பிறக்கும்' என்ற எண்ணங்களின் சாரமாக இந்தப் பாட்டை பாடுகிறார். கோழிக் கொடியன் அடிபணி யாமல் குவலயத்தே வாழக் கருதும் மதியிலி காள்!உங்கள் வல்வினை நோய் ஊழிற் பெருவலி உண்ணஒட் டாதுஉங்கள் அத்தம்எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் அடிப்பிறகே? (கோழியைக் கொடியாகக் கொண்ட முருகனுடைய திருவடியைப் பணிந்து அவன் அருளைச் சேமிக்காமல் உலகில் நன்றாக வாழ எண்ணும் 129