பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அறிவில்லாத மக்களே! உங்கள் தீவினை நோய் ஆகிய விதியிலே பெரு வலிமையையுடைய பகுதி நீங்கள் சேமித்த பொருளை உண்ணும்படி உங்களை விடாது. நீங்கள் உண்ண முடியாமல் இருக்கும் உங்கள் பொருள் எல்லாவற்றையும் நிலத்தில் ஆழமாகப் புதைத்து வைத்தால் அவை நீங்கள் இறந்த பிறகு உங்கள் அடிக்குப் பிறகே உங்களைப் பின்பற்றி வருமா? வல்வினை - இழவூழ். அது துன்பத்துக்குக் காரணமாதலின் நோய் என்றார். வல்வினையாகிய நோய்; நோயாகிய பெருவலி. அத்தம் - அர்த்தம்; பொருள். ஆழ - ஆழும்படியாக, மறையும் படியாக. அடிப்பிறகே வருதலாவது, போகும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து வருதல். உங்கள் அத்தமெல்லாம் உண்ண வொட்டாது, அது வருமோ என்று கூட்டிப் பொருள் செய்க.) இந்தப் பாட்டுக்கு மறுதலையான குறிப்பை ஆராய்ந்தால், கோழிக்கொடியன் அடிபணிந்தால் குவலயத்தே வாழலாம்; சேமிக்கும் பொருளை உண்ணலாம்; புதைத்து வைக்காமல் பிறருக்கும் கொடுக்கலாம். அதன் பயனாக விளையும் புண்ணியம் தொடர்ந்து வரும் என்ற பொருள் கிடைக்கும். 130