பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வற்றைக் கொண்டு அவ்வியைபைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதை இந்தச் சொற்பொழிவில் காணலாம். அருணகிரியார் செய்த புதுமைகளில் யமனை முன்னிலைப் படுத்தி அறைகூவும் முறை ஒன்று. “தண்டாயுதமும்' என்ற பாடல் அத்தகையது. அப்பாட்டில் தொண்டே ஞானமாதலை விரிவாக விளக்கியிருக்கிறேன். 'நீலச்சிகண்டியில்' என்ற பாட்டில் உள்ள சீலம் இன்னதென்பதைச் சற்றே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். 大 இதில் வரும் பாடல்களில் மூன்று (1,3,4) முருகனை முன்னிலைப்படுத்திப் பாடியவை; மற்ற மூன்றும் (2,5,6) படர்க்கைப் பரவல். முதற்பாட்டில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக விரவியிருக்கின்றன. பின்னும் சில பாடல்கள் இப்படி வருகின்றன. திருப்புகழில் வடசொற்களும் தொடர்களும் மிகுதியாகக் கலந்து வரும் இடங்கள் பல. மரணத்தை எண்ணி அஞ்ச வேண்டாம் என்பதை வேறு வேறு வகையில் அருணகிரியார் சொல்கிறார். இதில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்துப் பாராயணம் பண்ணுவதனால் நம் உள்ளம் உறுதி பெறும். இறைவனுடைய திருவருளில் முழு நம்பிக்கை வைத்து ஒளிநெறியிலே பழகுகிறவர்களுக்கு இவை போன்ற பாடல்கள் துதிகளாகவும், மந்திரமாகவும், கவசமாகவும் பயன்படுபவை. கி.வா. ஜகந்நாதன் 18,O4.1957 136